பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேர உணவாக இட்லி அல்லது தோசை தான் இருக்கும். இட்லி மாவு இல்லாத நேரங்களில் அதற்கு பதிலாக கோதுமை மாவு வைத்து சப்பாத்தி அல்லது பச்சரிசி பொங்கல் வைப்பது வழக்கம். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு மணி கணக்கில் நேரமாகும். காலை நேரங்களில் அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது பத்தே நிமிடத்தில் ஹெல்த்தியான பிரேக்ஃபாஸ்ட் செய்யணுமா அப்போ இந்த அவல் அடை ட்ரை பண்ணி பாருங்க.
முதலில் ஒரு கப் அவலை இருமுறை கழுவி சுத்தம் செய்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி அந்த அவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துவிடும். இப்பொழுது மாவு தயாராக உள்ளது.
இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி ஐந்து முதல் பத்து நறுக்கிய சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், துருவிய ஒரு கேரட், அரை கப் தேங்காய் துருவல், கைப்பிடி அளவு கருவேப்பிலை பொடியாக நறுக்கியது, கால் தேக்கரண்டி சீரகம், பாதி அளவு எலுமிச்சை பழம் சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக மாவின் அளவிற்கு ஏற்றவாறு உப்பு சேர்த்து கலந்து கொடுத்து கொள்ளலாம். இப்பொழுது அடை செய்வதற்கு மாவு தயாராக உள்ளது. எப்பொழுதும் போல தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சுடேற்ற வேண்டும். அதன் பின் நாம் கலந்து வைத்திருக்கும் மாவை கையில் நல்லெண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து நன்கு தோசை போல தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹெல்தியாவும் சாப்பிடனும் டேஸ்ட்டாவும் சாப்பிடணுமா? சிறு தானிய வாழைப்பூ அடை!
கையில் முறையாக தட்ட வரவில்லை என்றால் எண்ணெய் தடவிய கவர் அல்லது வாழை இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தட்டிய அந்த அடையை தோசை கல்லில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து இருபுறமும் முறுமுறுவென வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அப்பொழுது சுவையான அவல் அடை தயார். இந்த அடைக்கு தனியாக சட்னி என எதுவும் வைக்கத் தேவையில்லை இதிலே மிளகாய் கலந்திருப்பதால் காரசாரமாக இருக்கும். தேவைப்பட்டால் தேங்காய் சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ வைத்து சாப்பிட்டால் சுவை மேலும் அருமையாக இருக்கும்.