நம் உடம்பில் சில நேரங்களில் அஜீரண கோளாறு அல்லது பசியின்மை, வாய்வுத் தொல்லை என சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு நம் வீட்டில் உள்ள சில கை மருந்துகள் வைத்து நிவாரணம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு வைத்து சாதம் செய்து சாப்பிடலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூண்டு- 30 30 பல்
காய்ந்த வத்தல் – 5
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
கடுகு- ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 1
மல்லி இலை மற்றும் புதினா இலை – கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
செய்முறை
முதலில் வெள்ளைப் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வெள்ளை பூண்டு, காய்ந்த வத்தல், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய பொருட்களை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென எடுத்துக் கொள்ள வேண்டும்.மையாக அரைக்க தேவையில்லை.
மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும். அதில் தாளிப்பிற்காக கடுகு மற்றும் கருவேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளலாம். கடுகு நன்கு பொறிந்ததும் வந்ததும் அதில் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும்வரை வதக்கினால் போதுமானது.
மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ!
அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு விழுதுகளை சேர்த்து இதனுடன் நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது இறுதியாக பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமக்கு பூண்டு சாதம் செய்வதற்கு தேவையான தொக்கு தயாராக உள்ளது. சூடாக வடித்த சாதத்தை இந்த தொக்கில் போட்டு கிளறும் பொழுது நமக்கு பூண்டு சாதம் தயார்.