மைதா, முட்டை, ஓவன் இல்லாமல் வீட்டிலேயே அசத்தலான வாழைப்பழம் கேக்! டேஸ்டான ரெசிபி இதோ…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேக் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். இந்த கேக்கை நாம் பேக்கரி சென்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே மைதா, முட்டை. ஓவன் என எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் வாழைப்பழம் வைத்து அசத்தலான கோதுமை கேக் செய்யலாம் வாங்க. இந்த கேக் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த வாழைப்பழம் கேக் செய்வதற்கு நன்கு பழுத்த வாழைப்பழம் நான்கு முதல் ஐந்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை கழுவி சுத்தம் செய்து தோள்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த இந்த விழுதுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதனுடன் கால் கப் தயிர், அரைக்கப் எண்ணெய், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்ததாக இரண்டு கப் கோதுமை மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா, ஒரு தேக்கரண்டி பட்டை தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் இரண்டரை கப் அளவு பாலை மெதுமெதுவாக சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும். இப்படி கலந்து கொள்ளும் பொழுது கைப்பிடி அளவு சாக்கோ சிப்ஸ், வால்நட்டை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் கேக் செய்யும் பாத்திரத்தின் அடியில் பட்டர் ஷீட்டை சேர்த்துக்கொண்டு நாம் கலந்து வைத்திருக்கும் மாவை அதில் பரப்பிக் கொள்ளலாம். அதன் மேல் மேலும் சுவைக்காக சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்குடல் குழம்பு!

இப்பொழுது குக்கரில் அடியில் ஒரு தட்டு போன்ற ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு அதன் மேல் கேக்கு கலவையை ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தை செய்யாமல் வைக்க வேண்டும். தொடர்ந்து 75 நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

75 நிமிடங்களுக்கு பின் கேக்கை வெளியே எடுத்து ஒரு கத்தியை வைத்து அதன் மையப் பகுதியில் சற்று குத்தி பார்க்க வேண்டும். அப்பொழுது கத்தியில் கேக் ஒட்டாமல் வந்தால் கேட்க நன்கு வந்துவிட்டதாக அர்த்தம். இப்பொழுது சுவையான வாழைப்பழ கோதுமை கேக் தயார். பேக்கரிகளில் வாங்கும் கேக்கை விட இதில் எந்தவிதமான ரசாயன பொருட்கள், நிறமிகளின் கலவை இல்லாததால் இந்த கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம்.