வழக்கமான தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று இல்லாமல் தினமும் வித்தியாசமாக சட்னி வைக்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றும். எனவே தினமும் என்ன சட்னி வைக்கலாம் என்ற குழப்பத்துடன் தான் காலை பொழுது ஆரம்பிக்கும். இனி இந்த குழப்பம் வேண்டாம். ஒரு முறை வித்தியாசமாக இந்த துவரம் பருப்பு சட்னியை வைத்து பாருங்கள். இது மிகவும் சுவையான சட்னி வகையாகும். இட்லி, தோசை, ரசம் சாதம் என அனைத்திற்கும் இது மிகப் பொருத்தமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை சில நிமிடத்தில் தயார் செய்து விடலாம். துவரம் பருப்பை ஊற வைக்கும் வேலை மட்டும்தான். மற்றதெல்லாம் மிக எளிமையான செய்முறை. இதற்கு தக்காளி, வெங்காயம் போன்ற எந்த விதமான காய்கறிகளையும் நறுக்கும் வேலை இல்லை. மிக சுலபமான சட்னியாகும்.
இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!
கால் கப் அளவு துவரம் பருப்பை ஊற வைக்க வேண்டும். துவரம் பருப்பு நன்கு ஓரியதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இந்த துவரம் பருப்புடன் 5 வர மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்து இதனுடன் சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு வரமிளகாய், கொஞ்சமாக கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பின்பு அரைத்து வைத்த பருப்பு, மிளகாய் விழுதை சேர்க்க வேண்டும்.
இதனுடன் சிறிதளவு புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றவும். அடுப்பில் தீயை குறைவாக வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இந்த சட்னி செய்யும் பொழுது தீ அதிகமாக இருந்தால் சீக்கிரம் அடி பிடித்து விடும் எனவே குறைவான தீயில் வைக்க வேண்டும். இந்த சட்னி ஆற ஆற கெட்டித்தன்மை உடையதாக மாறிவிடும். எனவே கொஞ்சம் தண்ணீராக இருப்பது நல்லது.
அனைத்து வகையான காலை, இரவு உணவுக்கும் சூப்பரான சைடிஷ் வெங்காய கோஸ்!
அவ்வளவுதான் எளிமையான துவரம் பருப்பு சட்னி தயார். இது இட்டலி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.