அனைத்து வகையான காலை, இரவு உணவுக்கும் சூப்பரான சைடிஷ் வெங்காய கோஸ்!

காலை மற்றும் இரவு உணவுக்கு ஒரே மாதிரியான சட்டினி, துவையல், சாம்பார் என்று இல்லாமல் வித்தியாசமாக முயற்சிக்க விரும்புபவர்களுக்காக இந்த வெங்காய கோஸ் ரெசிபி. இந்த வெங்காய கோஸ் இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரி, தோசை என அனைத்து விதமான காலை இரவு உணவு வகைகளுக்கும் மிக பொருத்தமாக இருக்கும். இந்த வெங்காய கோஸ் டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட வித்தியாசமாகவும் அதே சமயம் மிக சுவையாகவும் இருக்கும்.

கத்தரிக்காய் இருந்தால் ஒரு முறை இந்த கோஸ் மல்லி செய்து பாருங்கள்… இடியாப்பம், தோசைக்கு சூப்பரான கோஸ் மல்லி!!

வெங்காய கோஸ் செய்ய இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கையும் தோல் சீவி மெல்லிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு தக்காளிகளை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் எட்டு வர மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இவற்றை அரைத்த பின்பு மிக்ஸியில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு துருவிய தேங்காய், ஒரு மேஜை கரண்டி பொட்டுக்கடலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஒரு துண்டு பட்டை, ஒரு பிரிஞ்சி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். ஓரளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அரைத்த விழுதை ஊற்றி தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி விடலாம்.

இட்லியுடன் சுட சுட இந்த இட்லி சாம்பார் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்… எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது!

அவ்வளவுதான் சூடான வெங்காய கோஸ் தயார்!!!

Exit mobile version