உணவகங்களில் கிடைக்கும் பிரைடு ரைஸை மிஞ்சும் சுவையில் இனி வீட்டிலேயே பிரைட் ரைஸ் செய்யலாம்…!

உணவகங்களில் கிடைக்கும் பிரைடு ரைஸ் பலருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாகும். நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யும் வெஜ் ப்ரைட் ரைஸ், சிக்கன் வைத்து செய்யும் சிக்கன் பிரைடு ரைஸ் என பிரைடு ரைஸ்களில் பலவிதமான வகைகள் உண்டு. காய்கறிகள் சேர்த்து செய்யும் வெஜிடபிள் ப்ரைடு ரைஸை நாம் வீட்டிலேயே சுவையாக செய்ய முடியும். இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். இதை செய்வது மிக சுலபம். மேலும் இந்த வெஜ் ஃப்ரைடு ரைசின் சுவையும் நன்றாக இருக்கும்.

உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே பிரியாணியை மிஞ்சும் விதத்தில் குஸ்கா!

வெஜ் ஃபிரைடு ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் முன்னதாக ஊற வைத்து விட வேண்டும். அரிசி நன்கு உரிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த தண்ணீரில் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து அரிசி 90% வெந்த பிறகு சாதத்தை வடித்து எடுத்து வேறு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து விட வேண்டும்.

இரண்டு உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இதனை சில நிமிடங்களுக்குப் பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொரித்து எடுத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரைட் ரைஸ் செய்வதால் ப்ரைட் ரைஸ் மெல்லும் பொழுது இந்த உருளைக்கிழங்கும் கடிபட்டு இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

இப்பொழுது கனமான ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய ஒரு கப் கேரட், பாதி முட்டைக்கோஸ், ஒரு கப் பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். காய்கறிகள் முழுதாக வெந்து குழைந்து விடக்கூடாது. இதனுடன் இப்பொழுது ஒரு ஸ்பூன் அளவு தக்காளி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து அரிசியை உடைத்து விடாமல் அனைத்தையும் மெதுவாக கிளறி விடவும். இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ப்ரைட் ரைஸ் தயாராகி விட்டது.

Exit mobile version