நவராத்திரிக்கு சுலபமாக செய்யலாம் சுவையான இந்த ரவை பாயாசம்…!

பண்டிகை நாட்கள் என்றாலே பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது. பாயாசங்களை பல வகைகளில் நாம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் செய்கிறோம். ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான சுவையில் அனைவருக்கும் பிடித்த வண்ணம் இருக்கிறது. அதேபோல் தான் இந்த ரவை பாயாசமும் செய்வதற்கு சுலபமாகவும் அதே சமயம் சுவை நிறைந்தும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். இந்த நவராத்திரிக்கு ரவையை வைத்து செய்யும் இந்த ரவை பாயாசத்தை செய்து அசத்திடுங்கள்.

மஹாளய அமாவாசைக்கு ஜவ்வரிசி பாயசம் இப்படி செய்து பாருங்கள்… எளிமையான ஜவ்வரிசி பாயாசம்…!

ரவை பாயாசம் செய்ய அரை கப் அளவு ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலி வைத்து ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நெய் சூடானதும் ரவையை சேர்த்து நன்றாக சூடு வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த ரவையை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.

அடுப்பில் அரை லிட்டர் அளவு பால் சேர்த்து பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் காய்ந்ததும் வறுத்து ஆற வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி விடவும். ரவையை சேர்த்த பிறகு அதனை நன்றாக வேக விட வேண்டும். ரவை பாலில் நன்றாக வெந்ததும் கால் கப் அளவு சீனி சேர்த்து கலக்கி விட வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு சுவையான பால் பாயாசம்…! வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்!

ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்க விடவும். தனியாக ஒரு சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து விருப்பமான அளவு முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாயாசம் இறுகி வந்ததும் வறுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கலக்கி இறக்கி விடலாம்.