கேப்பை அல்லது கேழ்வரகு என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறு தானியம் ஆகும். இந்த கேப்பை புட்டு மிக ஆரோக்கியமான சுவையான ஒரு உணவு வகை ஆகும். கேப்பையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர் கேப்பையை அடிக்கடி உணவில் சேர்த்தால் இரும்பு சத்து பெற்று ரத்த சோகையிலிருந்து விடுபடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் கேப்பையில் நிறைந்துள்ளது.
உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி…! சத்தான வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?
கேழ்வரகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க கேப்பை பெரிய அளவில் உதவி புரிகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த கேப்பையை வைத்து கேப்பை புட்டு தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
இந்த கேப்பை புட்டு தயாரிக்க ஒரு கப் கேப்பை மாவுடன் கால் கப் அரிசி மாவு சேர்த்து இரண்டையும் கலந்து தண்ணீர் சிறிதளவு தெளித்து லேசாக கிளறி கொள்ள வேண்டும். சிறிது நேரம் இதனை அப்படியே ஊற விட வேண்டும் நாம் கலந்த மாவு ஈரப்பதத்துடன் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு இட்டலி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இட்டலி தட்டுகளில் நாம் தயார் செய்து வைத்த மாவினை வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு வெந்ததும் அதனை தனியாக எடுத்து அதனுடன் ஒரு கப் சீனி நான்கு மேஜை கரண்டி தேங்காய் பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மேசை கரண்டி பாசிப்பருப்பையும் தனியாக வேகவைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம். இது கேப்பை புட்டு இனிப்பு சுவையில் தயாரிக்கும் ரெசிபியாகும்.
இதே கேப்பை புட்டை இனிப்பு விரும்பாதவர்கள் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீனிக்கு பதிலாக தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த மாவுடன் சேர்த்து உப்பு புட்டாகவும் சாப்பிடலாம்.
என்ன சுரைக்காயை வைத்து இவ்வளவு சூப்பரான அல்வாவா??? சுண்டி இழுக்கும் சுரைக்காய் அல்வா!!!
அவ்வளவுதான் சுவையான கேப்பை புட்டு தயார்!