இரண்டே நிமிடத்தில் ஈஸியா செய்யலாம் பொட்டுக்கடலை சட்னி…!

இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்றது இந்த பொட்டுக்கடலை சட்னி. இந்த பொட்டுக்கடலை சட்னி செய்வது மிக மிக சுலபம். மேலும் இந்த பொட்டுக்கடலை சட்னி சுவை நிறைந்ததாகவும் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த பொட்டுக்கடலை சட்னி எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இட்லி தோசைக்கு சுவையான கார சட்னி…! இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!

பொட்டுக்கடலை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதில் ஏழு வர மிளகாய்களின் காம்பை கிள்ளி சேர்த்து எண்ணெயில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த வரமிளகாய் கூடவே ஆறு பல் பூண்டையும் சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் கருகிவிடாமல் எண்ணெயில் நன்கு வேறுபட்டதும் இதனை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவு பொட்டுக்கடலை சேர்த்து இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவில் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் வறுத்து வைத்திருக்கும் வர மிளகாய் மற்றும் பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். சட்னி நன்கு அரை பட்டதும் இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

இப்பொழுது ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு வரமிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்கு பொரிந்து தாளித்த பிறகு இதனை நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் சேர்த்து விடலாம்.

சுவையான காரசாரமான பூண்டு சட்னி…! இட்லி தோசைக்கு இந்த சட்னி செய்து அசத்துங்கள்!

அவ்வளவுதான் சுவையான பொட்டுக்கடலை சட்னி தயாராகி விட்டது.

Exit mobile version