சுவையான காரசாரமான பூண்டு சட்னி…! இட்லி தோசைக்கு இந்த சட்னி செய்து அசத்துங்கள்!

பூண்டு உடலுக்கு தேவையான பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவு பொருள். நாம் அன்றாட உணவில் பூண்டை ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளுதல் உடலுக்கு நலம் தரும். இப்படி உடலுக்கு நன்மை தரக்கூடிய பூண்டை வைத்து காரசாரமான சுவையான பூண்டு சட்னி செய்தால் இட்லி தோசை என அனைத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பூண்டு சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா பூண்டின் தோல் உரிக்க நீங்க கஷ்டப்பட வேண்டாம்…!

பூண்டு சட்னி செய்வதற்கு ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். 20 இலிருந்து 25 பூண்டு பற்களை எடுத்து அதையும் தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தோல் உரித்த பூண்டையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் 15 வர மிளகாய்களின் காம்பை கிள்ளி அதையும் சேர்த்து வதக்க வேண்டும். இதை குறைவான தீயில் வைத்து ஒன்றரை நிமிடங்களில் இருந்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு இதனை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடலாம். இந்த வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். நன்றாக அரைபட்ட பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து இதை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு… ஒரு முறை வச்சு பாருங்க ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

ஏற்கனவே வதக்கிய கடாயில் இப்பொழுது மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். இவை அனைத்தையும் தாளித்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி இதனை பரிமாறலாம். காரம் குறைவாக விரும்புபவர்கள் 15 வரமிளகாய்க்கு பதிலாக எட்டில் இருந்து பத்து வரமிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். காரம் குறைவாக ஆனால் நல்ல சிவப்பான நிறத்துடன் சட்னி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காஷ்மீரி மிளகாய்களை பயன்படுத்தினால் அதில் அதிக காரம் இருக்காது. அவ்வளவுதான் சுவையான காரசாரமான பூண்டு சட்னி தயாராகி விட்டது!

Exit mobile version