மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை வைத்து அருமையான முடக்கத்தான் தோசை!

உடலில் உண்டாக கூடிய முடக்கு பிரச்சனைகளை தீர்ப்பதால் இதனை முடக்கத்தான் கீரை என்று அழைப்பார்கள். கிராமங்களில் வேலியோரங்களில் சாதாரணமாக காணக் கிடைக்கும் இந்த முடக்கத்தான் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கும். மூட்டு பிரச்சனைகள் குடலில் உண்டாக கூடிய அலர்ஜி போன்ற பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது இந்த முடக்கத்தான் கீரை. பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். அதிக நன்மைகளை தரக்கூடிய இந்த முடக்கத்தான் கீரை வைத்து எப்படி சுவையான முடக்கத்தான் தோசை செய்யலாம் என்பதை பார்ப்போம்.

அருமை…! மூட்டு வலி பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்!

முடக்கத்தான் தோசை செய்வதற்கு ஒரு கப் அளவு புழுங்கல் அரிசி மற்றும் ஒரு கப் பச்சரிசி எடுத்துக்கொள்ள வேண்டும் இவை இரண்டையும் அலசி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கால் கப் உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் வெந்தயம் இவை இரண்டையும் ஒன்றாக அலசி தனியே ஊற வைக்கவும்.

ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். கீரையை நன்கு வடிய வைத்து கொள்ள வேண்டும். கிரைண்டரில் முதலில் ஊற வைத்த உளுந்தை கொஞ்சமாக போட்டு ஆட்டிக் கொள்ள வேண்டும். உளுந்தை ஆட்டிய பிறகு ஊற வைத்திருக்கும் அரிசியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து சூப்பரான காலை நேர டிபன்! தூதுவளை அடை!!!

அரிசி ஓரளவு அரைப்பட்டவுடன் கீரையை சேர்த்து மை போல அரைத்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் நன்கு மசிந்ததும் இப்பொழுது இந்த மாவை எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். வழக்கமான தோசை போலவே முதல் நாள் இரவு மாவு தயார் செய்து வைத்தால் இந்த மாவை கொண்டு மறுநாள் காலை தோசை ஊற்றிக் கொள்ளலாம் இந்த தோசையோடு தேங்காய் துவையல் அல்லது சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இந்த தோசை உடலுக்கும் நன்மை தரும்.

வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!

அவ்வளவுதான் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் தோசை தயார்…!

Exit mobile version