ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!

இல்லத்தரசிகளுக்கு பெரும்பாலும் காலைப்பொழுது என்ன சட்னி செய்வது என்ற சிந்தனையுடன் தான் தொடங்கும். தினமும் புதிது புதிதாய் சட்னி செய்வதும், வழக்கமாய் செய்யும் சட்னிகளில் ஏதேனும் வித்தியாசமாக செய்வது என இல்லத்தரசிகள் புதிதாய் முயற்சி செய்து கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். இன்று வழக்கமாய் நாம் செய்யும் தேங்காய் சட்டினி வீட்டில் செய்வதைப் போல இல்லாமல் ஹோட்டல் சுவையில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தோசை, இட்லி, பொங்கல், உப்புமா, அடை, மெதுவடை என அனைத்து வகையான டிபன்களுக்கும் பொருத்தமான ஒரு சட்னி தான் தேங்காய் சட்னி.

இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!

இந்த தேங்காய் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய மூடி தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் தேங்காயின் ஓட்டின் பழுப்பு நிற பகுதிகள் வராமல் வெண்மை நிறம் மட்டும் இருக்கும்படி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் 50 கிராம் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்க்கவும்.

இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய தொண்டு இஞ்சியை தோல் சீவி சிறிதாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும். இரண்டு சின்ன வெங்காயங்களை தோல் உரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக புளி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சட்னிக்கு தேவையான உப்பு சேர்த்து இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் மைபோல அரைக்காமல் கொஞ்சம் திப்பியாக இருக்கும் படி அரைக்கவும் அப்பொழுது தான் நன்றாக இருக்கும்.

ஒரு இரண்டு நிமிடங்கள் வரை இதனை அரைத்த பிறகு ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது தாளிக்கும் கரண்டியில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு வர மிளகாய் சேர்க்கவும். வரமிளகாய் காய்ந்த பிறகு அரை ஸ்பூன் கடுகு சேர்த்து நன்கு பொரிய விடவும். பிறகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை தாளிக்கவும். இறுதியாக இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இதை சூடாக அப்படியே அரைத்த சட்டினியின் மீது சேர்க்கவும்.

இட்லி, தோசைக்கு அருமையான துவரம் பருப்பு சட்னி…!

அவ்வளவுதான் ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி தயார்!