காலைப் பொழுதை ஆரோக்கியமாக தொடங்குங்கள் சத்தான வரகரிசி வெண்பொங்கலுடன்…!

சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி சத்துக்கள் நிறைந்த உணவு ஆகும். உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் என அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும் மலச்சிக்கல் வராமலும் காக்கிறது. மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வரகு ஒரு நல்ல உணவு பொருள் ஆகும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை குறைத்திட வரகு உணவை அதிகமாக சாப்பிட்டு வர உடல் எடையை வெகுவாக குறைத்திட முடியும். மேலும் இதில் மாவுச்சத்துக்கள் மிகக் குறைவான அளவில் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதய ஆரோக்கியம் மேம்படவும் உதவி புரிகிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த வரகு அரிசி வைத்து எப்படி சுவையான வரகரிசி வெண்பொங்கல் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அனைத்து பயன்களையும் அள்ளித் தரும் கம்பு வைத்து அருமையான கம்பு கிச்சடி…!

இந்த வரகு அரிசி வெண்பொங்கல் செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு வரகு அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் நன்றாக ஐந்திலிருந்து ஆறு முறை அலசிக் கொள்ளவும். இதனுடன் அரை கப் அளவு பாசிப்பருப்பு சேர்த்து இரண்டு முறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நல்ல தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வரை ஊற விடவும்.

இப்பொழுது ஒரு குக்கரில் 5 டம்ளர் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் ஏற்கனவே அலசி வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இதனுடன் கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் நான்கு விசில் வரும் வரை வைக்க வேண்டும். நான்கு விசில் வந்ததும் அரிசி நன்கு குழைந்து வெந்து வந்திருக்கும்.

இப்பொழுது இதற்கான தாளிப்பை சேர்க்கலாம். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். நெய் உருகியதும் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒன்றரை டீஸ்பூன் மிளகு மற்றும் ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும்.

கிராமத்து சுவையில் அட்டகாசமான ஆட்டுக்கால் சூப்…! வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்!

இவற்றை சேர்த்த பிறகு 20 முந்திரி பருப்பை சேர்த்து சிறிது நேரம் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு கொத்து கறிவேப்பிலை இலையும் சேர்த்து இந்த தாளிப்பை பொங்கல் உடன் சேர்த்து விடலாம். அவ்வளவுதான் மனம் வீசும் சத்தான சுவையான வரகரிசி வெண்பொங்கல் தயார்.