இதை வைத்து எந்தவிதமான ரெசிபி செய்தாலும் அந்த உணவு சுவையாக இருக்கும் என்று அனைவரும் எண்ணக் கூடிய ஒரு உணவுப் பொருள்தான் முட்டை. சுவை மட்டும் இன்றி முட்டையில் உடலுக்குத் தேவையான பல சத்துக்களும் நிறைந்துள்ளது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் தினமும் ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடல் நலனுக்கு நன்மை தரும் முட்டையை வைத்து சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
மீனை வைத்து இப்படி ஒரு ரெசிபியா? கேரளா ஸ்டைலில் சூப்பரான மீன் பொழிச்சது!!!
இந்த முட்டை குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதில் கால் ஸ்பூன் அளவு கடுகு சேர்க்கவும். பின்பு வாசனைக்காக ஒரு பட்டை துண்டு, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
தாளித்து முடித்த பின்பு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கவும். வதங்கும் பொழுதே ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும் அனைத்தையும் நன்கு வதக்கி விடவும். இப்பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் இவை வதங்கிய பின்பு பொடி பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளிகளை சேர்த்து வதக்கவும் இவை அனைத்தும் நன்கு மசியும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் மசிந்த பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். 4 மேசை கரண்டி அளவு தேங்காய் பூவை அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து நான்கு முதல் ஐந்து முட்டைகளை இதில் மெதுவாக ஊற்றவும்.
முட்டைகளை ஊற்றிய பின்னர் சிறிது நேரம் மூடி போட்டு ஒரு புறம் வேகும் வரை காத்திருக்கவும். ஒரு புறம் வெந்த பின்பு மெதுவாக திருப்பி மற்றொரு புறமும் வேகவைத்துக் கொள்ளவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடலாம்.
ஊரே மணக்கும் மட்டன் குழம்பு… இனி இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்கள்…!
அவ்வளவுதான் சுவையான மணம் நிறைந்த முட்டை குழம்பு தயார்! இது சாதம், சப்பாத்தி என அனைத்து உணவுகளுக்கும் மிக சுவையாக இருக்கும்.