மணம் நிறைந்த தேங்காய் சாதம்.. அட்டகாசமான சுவையில் இப்படி செய்யுங்கள்!

தேங்காய் சாதம் அதிகம் காரமோ மசாலாக்களோ இல்லாமல் எளிமையான பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய சுவையான ஒரு வெரைட்டி ரைஸ். அதுவும் இந்த தேங்காய் சாதம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும். அதனால் தேங்காய் எண்ணெயோடு தேங்காய் பூவும் சேர்ந்து இந்த சாதத்தின் மணம் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும்.

உங்க குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு தக்காளி சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இந்த தேங்காய் சாதத்தை பொன்னி பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி என நீங்கள் விரும்பிய எந்த அரிசியில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அரிசி அதிகம் குழையாமல், விதையாகவும் இல்லாமல் பக்குவமாக வடித்து இருக்க வேண்டும். பக்குவமாய் வடித்த சாதத்தை சிறிது நேரம் அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.

ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது துருவிய தேங்காய் பூவினை கடாயில் ஈரம் போகும் அளவுக்கு குறைந்த தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த தேங்காய் துருவலை தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய வைக்க வேண்டும் காய்ந்த எண்ணெயில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு சேர்த்து தாளிக்கவும் பின் ஆறு வர மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வதக்கிய தேங்காய் பூவை இதனோடு சேர்த்து கிளறி விடவும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறவும்.

கிளறிய பின் ஏற்கனவே வடித்து ஆற வைத்த சாதத்தில் இதனை சூடாக சேர்த்து கிளற வேண்டும். சிறிது நேரம் அதே சூட்டுடன் மூடி வைத்திருக்க வேண்டும். விருப்பப்பட்டால் சிறிது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்…

பொரித்த அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வளவுதான் மணம் வீசும் தேங்காய் சாதம் தயார்!