செட்டிநாட்டு ஸ்டைலில் அருமையான வெண்டைக்காய் மண்டி இப்படி செஞ்சு பாருங்க!

சமையலுக்கு பெயர் பெற்ற செட்டிநாட்டு பகுதிகளில் வெண்டைக்காய், மொச்சைக்கொட்டை, மாங்காய் போன்ற காய்கறிகள் வைத்து செய்யப்படும் மண்டி வகைகள் மிகவும் பிரபலமானது. இந்த மண்டி புளிப்பு மற்றும் கார சுவையுடன் அட்டகாசமாக இருக்கும். அனைத்து விருந்து மற்றும் முக்கிய நிகழ்வுகளிலும் எதையாவது ஒரு மண்டி கட்டாயம் இடம் பிடித்து விடும். இப்பொழுது வெண்டைக்காயை வைத்து சுவையான வெண்டைக்காய் மண்டி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மகாளய அமாவாசை அன்று சைட் டிஷ் புடலங்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்!

வெண்டைக்காய் மண்டி செய்வதற்கு அரை கிலோ அளவு வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்து நீள துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 150 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 10 பல் பூண்டையும் தோல் உரித்து இதே போல் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். 10 பச்சை மிளகாயையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை காய வைத்து எண்ணெய் எதுவும் ஊற்றாமல் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு குறைவான தீயில் வைத்து வெண்டைக்காயை வழவழப்பு போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே கடாயில் இரண்டு மேசை கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை தாளித்த பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு முதலில் வதக்கிக் கொள்ளவும். பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரிசி களைந்த தண்ணீரை சிறிதளவு ஊற்றி கொதிக்க விட வேண்டும். இப்பொழுது ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயையும் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு புளியை கரைத்து இதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வற்றிவரும் பொழுது இறக்கி விடலாம். இது தயிர் சாதம் கலவை சாதம் போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.

கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல்… அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி?

செட்டிநாட்டு பகுதிகளில் சமையலில் மண்டி என்று சொல்லப்படுவது அரிசி கழுவிய தண்ணீரை தான் இந்த மண்டி எடுக்க அரிசி கழுவிய முதல் தண்ணீரை கீழே ஊற்றி விடவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தெளிய வைக்கவும் சற்று நேரத்தில் மேலாக உள்ள நீரை இருத்து விட்டு அடியில் கொஞ்சம் கெட்டியாக உள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.