அட்டகாசமான பட்டர் சிக்கன்… நீங்கள் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்யலாம்!!

பட்டர் சிக்கன் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இந்திய உணவு ஆகும். இந்த பட்டர் சிக்கன் ரெசிபி முதன் முதலில் டெல்லியில் உருவானதாக கூறுகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான விதத்தில் இதன் சுவை அமைந்திருக்கும். வட இந்தியாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஏன் உலகெங்கும் இது பிரபலமான உணவாக கருதப்படுகிறது. சிலர் உணவகங்களுக்கு சென்றாலே இந்த பட்டர் சிக்கன் தான் வாங்கி ருசித்து சாப்பிடுவார்கள். ருசியான பட்டர் சிக்கன் உணவகங்களில் மட்டும் இல்லாமல் இனி வீட்டிலேயே நீங்கள் அதே சுவையில் தயார் செய்ய முடியும்.

இனி KFC ஃப்ரைட் சிக்கன் சாப்பிட கடைகளுக்கு போக வேண்டியது இல்லை… சூப்பராக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்!!!

பட்டர் சிக்கன் செய்ய முதலில் சிக்கனை ஊற வைக்க வேண்டும். 200 கிராம் அளவு எலும்பு இல்லாத சிக்கனாக பார்த்து இந்த பட்டர் சிக்கனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிர், அரை மூடி எலுமிச்சை பழத்தை இதனுடன் சேர்க்க வேண்டும். ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து இதை நன்கு பிசைந்து குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

சிக்கன் ஊறிய பிறகு ஒரு கடாயில் ஒரு மேசை கரண்டி எண்ணெய் சேர்த்து ஊற வைத்த சிக்கனை இதில் நன்கு வதக்கி வேகவைத்து கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் நன்கு சிக்கனை வதக்க வேண்டும். வதக்கிய சிக்கனை ஓரமாக வைத்து விட்டு பட்டர் சிக்கன் செய்ய தேவையான மசாலாவை தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மசாலா தயாரிக்க ஒரு கடாயில் ஒரு மேசை கரண்டி வெண்ணை, இரண்டுமேசை கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய மூன்று தக்காளிகளை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். மூன்று காஷ்மீரி மிளகாய் சேர்த்து, ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி சீரகத்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் கால் டம்ளர் தண்ணீர் விட்டு இதனை நன்கு வதக்கி பத்து முந்திரிப் பருப்புகளை சேர்த்து அடுப்பை அணைத்து பின் ஆற விடவும். வதக்கிய இந்த மசாலா ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

இரத்த சோகையை விரட்டியடிக்கும் ஆட்டின் ஈரலை வைத்து அருமையான ஈரல் வறுவல்!

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேஜை கரண்டி வெண்ணெய், ஒரு மேஜை கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு எண்ணெயில் கிளறவும். பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கிளற வேண்டும். ஏற்கனவே வதக்கி ஆற வைத்திருக்கும் சிக்கனையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக பிரஷ் கிரீம் கால் கப் அளவு சேர்த்து கிளற வேண்டும். இதனை மூடிய நிலையில் 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு கசூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான பட்டர் சிக்கன் தயார்!!!