ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை வீட்டிலேயே சாப்பிட வேண்டுமா? ஸ்பெஷல் ரெசிபி இதோ…

நம் வீட்டில் இருக்கும் நபர்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பேராவது தோசை பிரியர்களாக இருப்பார். அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேளையும் தோசை கண்டிப்பாக வேண்டும். மேலும் ஹோட்டல் சென்று சாப்பிடும் பொழுதும் தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஹோட்டல்களில் ரவா தோசை என்றால் சொல்லவே வேண்டாம். முறுமுறுவென மணக்க மணக்க நெய்வாசத்தில் இருக்கும் இந்த ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். ஹோட்டலை போன்று முறுமுறுவென அருமையான ரவா தோசை வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

இந்த ரவா தோசை செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் ரவா, முக்கால் கப் மைதா மாவு, முக்கால் கப் அரிசி மாவு,முந்திரி பருப்பு 5, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, பொடியாக நறுக்கிய சிறிய, காரத்திற்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி சர்க்கரை தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் மாவை கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மாவு கெட்டியாக இல்லாமல் சற்று தண்ணீராக இருக்கும் அளவிற்கு தண்ணியாக மாவை தயார் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது கலந்து வைத்திருக்கும் மாவை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். குறைந்தது 15 முதல் 20 நிமிடம் ஆவது மாவு நன்கு ஊற வேண்டும்.

20 நிமிடம் கழித்து மாவை மீண்டும் ஒருமுறை கலந்து கொடுத்து இதில் இரண்டு தேக்கரண்டி ரவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மேலும் அரை தமிழர் தண்ணீர், கொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ரவா தோசைக்கு மாவு தயார். இந்த மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து சூடான தோசை கல்லில் சமமாக ஊற்றி கொள்ளவும். இந்த தோசைக்கு நெய் சேர்த்து செய்யும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா தோசை தயார்.

குழந்தைகளுக்கு பிடித்தமான பான்கேக்கை சத்து நிறைந்ததாக மாற்ற வேண்டுமா? கேழ்வரகு மாவு வைத்து அருமையான பான்கேக் செய்வதற்கான ரெசிபி இதோ…

இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார், குருமா என இது வைத்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும். போதும் என சொல்லாமல் மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவையான ரவா தோசை நம் வீட்டிலேயே செய்து முடிக்கலாம்.

Exit mobile version