குழந்தைகளுக்கு பிடித்தமான பான்கேக்கை சத்து நிறைந்ததாக மாற்ற வேண்டுமா? கேழ்வரகு மாவு வைத்து அருமையான பான்கேக் செய்வதற்கான ரெசிபி இதோ…

பான்கேக் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு முறைகளில் ஒன்று. ஆனால் இந்த பான் கேக் செய்வதற்கு பெரும்பாலும் மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. மைதா சார்ந்த உணவுகள் குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் பொழுது சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கும் பட்சத்தில் கோதுமை மாவு சேர்த்து கூட பான்கேக் செய்யலாம். மேலும் பான்கேக்கை சத்து நிறைந்ததாக மாற்ற கேழ்வரகு மாவு வைத்து அருமையாக செய்வதற்கான ரெசிபி இதோ…

ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் சற்று தடிமனான சிவப்பு அவல் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒருமுறை கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மெல்லிசாக தாள் போல் இருக்கும் அவல் பயன்படுத்தினால் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் நன்கு கழுவி சுத்தம் செய்து 15 நிமிடம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் கேழ்வரகு மாவு, அரை கப் வெல்லம், நன்கு பழுத்த ஒரு வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, ஏலக்காய் 2 சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நாம் கூற வைத்திருக்கும் அவளை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உப்புமாவா? பிடிக்கவே பிடிக்காது என சொல்பவர்கள் கூட வாரத்தில் இரு முறை இதே உப்புமா வேண்டும் என அடம் பிடிக்கும் சுவையின் நொய் அரிசி உப்புமா!
நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளலாம். மேலும் இந்த மாவை குறைந்தது ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து தோசை கல்லை மிதமான தீயில் சூடு படுத்தி பேன் கேக் மாவை கல்லில் ஊற்ற வேண்டும். இப்பொழுது தோசைக்கு தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு பக்கம் வெந்ததும் மற்றொரு பக்கம் மாற்றி போட்டு மூடி போட்டு வேக வைக்க வேண்டும். மிதமான தீயில் தோசை தயார் செய்யும் பொழுது மட்டுமே சுவை அருமையாக இருக்கும்.

முன்னும் பின்னும் பொன்னிறமாக வெந்ததும் ஒரு கட்டிற்கு மாற்றிவிடலாம். இந்த கேழ்வரகு பான் கேக்கில் அவல் சேர்த்து செய்வதால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த பான் கேக் இப்பொழுது சத்து நிறைந்ததாக மாறிவிட்டது. இதனுடன் சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். தேன் பிடிக்காத பட்சத்தில் அப்படியே கூட சாப்பிட கொடுக்கலாம்.

Exit mobile version