வாசனை மணக்க மணக்க ஐந்தே நிமிடத்தில் காரசாரமான பச்சை பட்டாணி குருமா!

பொதுவாக பச்சை பட்டாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு. இதை வைத்து குருமா செய்யும் பொழுது வீட்டில் இப்பொழுதும் அடியும் படியும் ஆகத்தான் இருக்கும். இந்த அளவிற்கு மிகவும் சுவையான இந்த பச்சை பட்டாணி குருமாவை எளிமையான முறையில் நம் வீட்டில் செய்வதற்கான அசத்தலான ரெசிபி இதோ..

சப்பாத்திக்கு மட்டுமின்றி இந்த பச்சை பட்டாணி குருமா பூரி, ஆப்பம், இடியாப்பம், தோசை என அனைத்திற்கும் சிறந்த சைடிஷ்ஷாக இருக்கும்.

இந்த குருமா செய்வதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் பச்சை பட்டாணியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் தேங்காய், 3/4 தேக்கரண்டி சோம்பு, ஐந்து முந்திரி பருப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கறி மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பச்சை சுண்டைக்காய் வைத்து அருமையான காரக்குழம்பு!
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி பழம் நன்கு மசிந்ததும் குருமாவிற்கு தேவையான இரண்டு உருளைக்கிழங்கு, இரண்டு கேரட், 5 பீன்ஸ் இவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒருமுறை மசாலாக்களின் மீது காய்கறிகள் முழுமையாக படும் வரை நன்கு கிளரி கொடுக்க வேண்டும். இப்பொழுது எட்டு மணி நேரம் ஊற வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிடலாம்.

குறைந்தது மூன்று விசில்கள் வரும்வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் சுவையான பட்டாணி குருமா தயார்.