உடலில் உள்ள பித்தத்தை குறைத்து, பசி உணர்வை தூண்டும் காரசாரமான தொக்கு ரெசிபி இதோ!

உடலில் அதிகப்படியான பித்தத்தின் காரணமாக சிலருக்கு பசியின்மை, தலை சுற்றுதல், வாந்தி, ஜீரண கோளாறு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். நேரம் தவறிய உணவு, அதிகப்படியான எண்ணெய் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு நம் வீட்டிலேயே எளிமையான முறையில் கைப்பக்குவ மருந்து, உணவு முறைகளில் மாற்ற முடியும். வகையில் பித்தத்தை சரி செய்து பசி உணர்வை தூண்டும் மல்லி இலை வைத்து அருமையான தொக்கு ரெசிபி இதோ….

இந்த மல்லி இலை தொக்கு செய்வதற்கு ஒரு கட்டு மல்லி இலைகளை புதிதாக வாங்கி கழுவி சுத்தம் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை அடுத்து எலுமிச்சை பழ அளவு புளியை வெந்நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது தொக்கு செய்வதற்கு தேவையான மசாலாக்களை முதலில் தயார் செய்து கொள்ளலாம். இதற்கு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த கடுகு மற்றும் வெந்தயத்தை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி மல்லி சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த மல்லியையும் தட்டிற்கு மாற்றி விடலாம்.

அடுத்து காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஏழு முதல் 10 வறுத்துக்கொள்ள வேண்டும். இந்த கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு வர மிளகாய் காரம் மட்டுமே பயன்படுத்துவதால் காரணம் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வறுத்த காய்ந்த வத்தலையும் அந்த தட்டிற்கு மாற்றி விடலாம்.

இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கடாய் இருக்கும் அதே சூட்டில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்த அனைத்து பொருட்களில் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மசாலாக்களை நன்கு மைய்யாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மல்லி இலைகளை வதக்க வேண்டும். அதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு கட்டு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

முதலில் இதை அதிகமாக இருப்பது போல் தோன்றினாலும் தொடர்ந்து வதக்கும் பொழுது சிறிது நேரத்தில் நன்கு இலை வதங்கி அதன் அளவு குறைந்து விடும். கொத்தமல்லி இலையை குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடம் வதக்கினால் நன்கு வெந்துவிடும்.

வதங்கிய கொத்தமல்லி இலையை நாம் மிக்ஸியில் மசாலா அரைத்ததுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். இதை அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் புளி ஊற வைத்திருக்கும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது தொக்கு செய்வதற்கு அதே கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்க்க வேண்டும். வெந்தயம் நன்கு பொரிந்து வந்ததும் மூன்று காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுதை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு நிமிடம் மிதமான தீயில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். அடுத்ததாக இதில் புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் ஐந்து உணவு பழக்க வழக்கங்கள்!

புளிக்கரைசலை சேர்த்த பிறகு 5 நிமிடம் வரை மிதமான தீயில் தொக்கை நன்கு கலந்து கொடுத்து கெட்டி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதிகப்படியான எண்ணெயில் தொக்கு வழங்கும் பொழுது இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் அதே சுவையில் அப்படியே இருக்கும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி தொக்கு தயார்.

இதை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, அப்பம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சுவையானதாக மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கும்.