கல்யாண வீட்டு ரவை கேசரி! சுவை மாறாமல் அதே சுவையில் செய்வது எப்படி?

வீடுகளில் ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் என்றாலே கட்டாயம் கேசரி இடம் பிடித்து விடும். ரவை கேசரி எளிமையாக வீட்டில் செய்வதற்கு சுலபமான ஒரு இனிப்பு பண்டமாகும். எனவே பிறந்தநாள், திருமணநாள், சிறப்பு பூஜைகள் என எந்த நிகழ்வு என்றாலும் சட்டென்று இனிப்பு செய்ய வேண்டும் என்று தோன்றினால் உடனடியாக அனைவரின் தேர்வும் இந்த கேசரி தான். இந்த ரவை கேசரியை என்னதான் நாம் வீடுகளில் செய்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் ரவை கேசரி கூடுதல் சுவையோடு இருக்கும். இப்பொழுது அதே சுவையில் ரவை கேசரியை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த மாதிரி பூரணம் செய்து விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை பிடித்து பாருங்கள்…! பாராட்டு மழையில் நனைவிங்க!

முதலில் ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் அதனுடன் 10 முந்திரி பருப்பை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு பொன்னிறம் ஆனதும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு உலர் திராட்சை சேர்த்து அதுவும் உப்பி வரும் வரை வறுத்து இரண்டையும் தனியாக வைத்து விடவும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவிற்கு ரவையை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். ரவை எண்ணெய் முழுவதையும் உள்வாங்கி வறுபட்டு இருக்கும்போது தனியாக ஒரு பாத்திரத்தில் மூன்று கப் அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும் பொழுது மஞ்சள் நிற கேசரி பவுடர் சிறிதளவை இதில் போட்டுக்கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பிறகு இதனை வறுத்து வைத்திருக்கும் கேசரியின் மீது கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறி விடவும். கட்டிகள் ஏதும் இல்லாத படி தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி முழுவதும் கிளறி விடவும்.

கைவிடாமல் கிளரும் பொழுது ரவை தண்ணீர் முழுவதையும் உள்வாங்கி நன்கு வெந்து வந்திருக்கும். இப்பொழுது ஒரு கப் ரவைக்கு ஒன்னே கால் கப் என்ற கணக்கில் சீனி சேர்த்து கிளறவும். சீனி சேர்க்கும் பொழுது சீனி உருகி மீண்டும் லேசாக தண்ணீர் விட்டிருக்கும் இதை கிளரும் பொழுது நன்கு இறுகி ஒட்டாமல் வரும். இந்த நிலையில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

விநாயகர் சதுர்த்திக்கு இந்த உப்பு சேர்த்த பிடி கொழுக்கட்டை செய்து பாருங்க.. எல்லோரும் பாராட்டுவாங்க!

இறுதியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி திராட்சை சேர்த்து கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.‌ அவ்வளவுதான் நெய் வாசம் வீச கல்யாண வீட்டு கேசரி அதே சுவை மாறாமல் வீட்டிலேயே செய்துவிடலாம்.