சிக்கன் வைத்து பல வகையான ரெசிபி செய்தாலும் அந்தந்த ஊரில் ஸ்பெஷலான சில ரெசிபிகள் என்றும் பிரபலம் தான். அதை சாப்பிடுவதற்காகவே பலர் வெளியூர்களில் பயணம் செய்வதும் உண்டு. அப்படி பிரபலமான அப்பல்லோ சிக்கன் நம் வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.
இந்த அப்பல்லோ சிக்கன் செய்வதற்கு எலும்பில்லாத சதைப்பகுதியை கொண்ட சிக்கனாக அரை கிலோ தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மல்லி பொடி, அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த சிக்கன் கலவையை ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து இதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி கான்பிளவர் மாவு, ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
இறுதியாக ஒரு முட்டையை ஒரு டம்ளரில் உடைத்து சேர்த்து நன்கு அடித்து அந்த கலவையை நாம் சிக்கன் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் இந்த கலவையை குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் ஃப்ரிட்ஜில் கூட ஊற வைக்கலாம்.
அதன் பின் ஒரு கடாயில் பொறித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை ஒன்று ஒன்றாக சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும். சிக்கனை பொரித்தெடுக்கும் பொழுது மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும்.
கோடை காலத்திலும் சளி தொல்லையா? அருமையான வீட்டு மருந்து வெற்றிலை பூண்டு சாதம்…
மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெள்ளைப்பூண்டு பத்து பல் சேர்த்து வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டு பாதியாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பச்சை மிளகாய், ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சீரகப்பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் மூன்று தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறுதியாக நாம் புரிந்து வைத்திருக்கும் சிக்கனை இதில் சேர்த்து மீண்டும் ஒருவரை கிளறினால் சுவையான அப்பல்லோ சிக்கன் தயார்.