இட்லி சாஃப்டாக வரவில்லையா? பஞ்சு போன்ற மென்மையான இட்லிக்கு இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

வீடுகளில் பெரும்பாலும் காலை உணவாக முக்கிய பங்கு வகிப்பது இட்லி தான். இட்லி மிகச்சிறந்த காலை உணவு என உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உணவு வகை. எண்ணெய், பொரித்தல், வறுத்தல் என்று இல்லாமல் ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் இந்த உணவு உடலுக்கு எந்த வித கெடுதலும் தராது. இந்த இட்லி சாஃப்டாக பஞ்சு போல வரவேண்டும் என பலருக்கும் ஆசை உண்டு. ஆனால் சில இடங்களில் என்னதான் பார்த்து பார்த்து மாவு அரைத்தாலும் இட்லி சாஃப்டாக வருவதில்லை. இனி கவலை வேண்டாம் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க உங்க வீட்டிலேயும் இட்லி மல்லிகை பூ போல மென்மையாக செய்யலாம்.

இட்லியுடன் சுட சுட இந்த இட்லி சாம்பார் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்… எத்தனை இட்லி சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது!

முதலில் இட்லிக்கு அரிசி மற்றும் உளுந்து ஊற வைக்கும் விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் நான்கு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற வீதத்தில் ஊறவைத்து மாவு அரைத்தால் இட்லி நன்றாக வரும். இட்லிக்கு என்று பிரத்தியேகமாக உள்ள அரிசியை பயன்படுத்தலாம் அல்லது குருணை அரிசியை பயன்படுத்தியும் இட்லி செய்தால் நன்றாக இருக்கும்.

இட்டலிக்கு மாவு கரைக்கும் பொழுது பெரும்பாலும் அயோடின் இல்லாத கல் உப்புக்களை பயன்படுத்தி மாவு கரைக்க வேண்டும். மாவை அதிக தண்ணீராகவோ மிகவும் கெட்டியாகவோ கரைக்கக் கூடாது. கரண்டியில் எடுத்து ஊற்றிப் பார்த்தால் ரிப்பன் போல அழகாய் வந்து விழவேண்டும் இந்தப் பதத்தில் மாவை கரைத்தால் சரியாக இருக்கும்.

மாவு சரியான பக்குவத்தில் புளித்திருக்க வேண்டும். மாவில் ஈஸ்ட் உருவாவதால் தான் மாவு புளித்து நன்கு பொங்கி வருகிறது. மாவு இரு மடங்காக பொங்கி வந்த பிறகு அதனை பயன்படுத்தி நாம் இட்லி செய்வோம். குளிர் காலங்களிலும் மழைக்காலங்களிலும் மாவு சீக்கிரம் என்று புளிக்காது. அது போன்ற நேரங்களில் ஒரு கப் தயிரை மாவுடன் கலந்து பயன்படுத்தினால் மாவு நன்கு பொங்கி வந்து இட்லிக்கு தயாராக இருக்கும்.

மாவோடு இரண்டு ஸ்பூன் அளவு ஈனோ சேர்த்து இட்லி செய்ய இட்லி மிகவும் பஞ்சு போல வரும். சிலர் ஈனோவிற்கு பதிலாக பேக்கிங் சோடா சேர்த்தும் இட்லி செய்வார்கள்.

அனைத்து வகையான காலை, இரவு உணவுக்கும் சூப்பரான சைடிஷ் வெங்காய கோஸ்!

ஒரு கப் நிறைய அவல் எடுத்து அதை நன்கு ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அவல் மாவை இட்லிக்கு அரைத்த மாவோடு சேர்ந்து கலந்து கரைத்து இட்லி செய்தால் இட்லி நன்கு மென்மையாக வரும்.

அவ்வளவுதான் இனி உங்கள் வீட்டிலும் பஞ்சு போன்ற மென்மையான இடங்களை அழகாய் சுடலாம்!