உங்கள் கேஸ் ஸ்டவ்வை இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பராமரித்து பாருங்கள்.. என்றும் புதிதாய் இருக்கும்!

இன்று மின்சாரம் மூலம் இயங்கும் எத்தனையோ சமையல் சாதனங்கள் வந்தாலும் இன்றும் பல வீடுகளில் கேஸ் ஸ்டவ்வுகள் தான் பெரும்பாலும் உபயோகத்தில் இருந்து வருகிறது. கேஸ் ஸ்டவ் சுத்தமாக இருப்பது மிக முக்கியம் ஏனென்றால் இது உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும் மேலும் கேஸ் ஸ்டவ் நீடித்து புதிது போல இருக்க வேண்டும் என்றால் அதற்கும் சில டிப்ஸ்களை ஃபாலோ செய்ய வேண்டும்.

கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும் பொழுது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்கள்:

1. சமைக்கும் பொழுது ஏதேனும் அடுப்பில் சிந்திவிட்டாலோ அல்லது பொங்கி அடுப்பில் வழிந்து விட்டாலோ, உணவுப் பொருட்கள் சிதறி விட்டாலோ அதனை உடனடியாக துடைத்து சுத்தம் செய்யுங்கள். அதை அப்பொழுதே சுத்தம் செய்து விட்டால் சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் கரை கடினமாகி வேலையும் அதிகமாக்கிவிடும். எனவே அப்பொழுது ஏற்பட்ட கரையை உடனுக்குடன் துடைத்து விடுங்கள்.

2. கேஸ் ஸ்டவ்வின் மிக முக்கிய பகுதியே அதன் பர்ணர்கள் தான். பர்னர் மீது எப்பொழுதும் நம் கவனம் இருக்க வேண்டும். பர்னரில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்று அவ்வபோது பரிசோதித்து கொள்ள வேண்டும்.

3. அடுப்பை தினமும் இரண்டு முறை ஈரத்துணியால் துடைத்து அதன் பிறகு காய்ந்த துணியால் துடைத்து விடுங்கள். தினமும் அடுப்பின் பகுதியை துடைத்தாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை இதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பை மாதம் ஒரு முறை டீப் கிளீன் செய்வதால் அடுப்பு புதிது போல் இருப்பதோடு நன்கு உழைக்கும்.

அடுப்பை டீப் கிளீன் செய்யும் முறை:

கேஸ் ஸ்டவ் அதன் இணைப்பை பரிசோதித்து கேஸ் சிலிண்டர் ஆனில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எப்பொழுதும் கேஸ் சிலிண்டர் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

அடுப்பில் உள்ள அடுக்குகள் மற்றும் பர்ணர்களை அடுப்பிலிருந்து கழட்டி விடுங்கள். இதனை தண்ணீரில் சோப் வாட்டரை கரைத்து அதில் சிறிது நேரம் ஊற வைத்து விடுங்கள்.

இப்பொழுது ஒரு கப்பில் தண்ணீர் நிரப்பி அதில் சிறிதளவு டிஷ் வாஷரை கலந்து ஒரு ஸ்பாஞ்சால் நனைத்து இதனை வட்ட வடிவத்தில் தேய்த்து கழுவுங்கள். எங்கேயும் அழுக்குகள் இருந்தால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி கழுவுங்கள்.

இப்பொழுது சாதாரண தண்ணீரில் துணியை நனைத்து அடுப்பு முழுவதும் துடைத்து விடுங்கள்.

ஊற வைத்திருக்கும் பர்ணர் மற்றும் அதன் அடுக்குகள், தட்டுகளை நன்கு கழுவுங்கள். பர்னரில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதனை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து விடுங்கள்.

அடுப்பின் அடுப்பு மற்றும் அதன் பகுதிகள் ஈரத்தோடு இருக்கும்படி விட்டு விடாதீர்கள். இதனை நன்கு துடைத்து காயவைத்த பிறகு பயன்படுத்துங்கள். ஈரத்தோடு இருக்கும் பொழுது பயன்படுத்தக் கூடாது.

அவ்வளவுதான் இப்படி சுழற்சி முறையில் செய்து வந்தால் உங்கள் கேஸ் ஸ்டவ் எப்பொழுதும் புதிது போல் இருக்கும்.