சமையல் அறை நாம் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டிய மிக முக்கியமான இடமாகும். அடுப்பில் ஏதேனும் உணவுப் பொருளை வைத்து விட்டு கொஞ்சம் கவனம் தவறினாலோ, அல்லது வேறு வேலைகளில் மூழ்கி விட்டாலோ அடுப்பில் உள்ள பொருட்கள் அடிப்பிடித்து விடக்கூடிய வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள் அடிப்பிடித்து கருகி விடுவதால் அந்த உணவு வீணாவதோடு மட்டுமில்லாமல் பாத்திரமும் சேர்ந்து வீணாகிவிடும். அதற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தை எவ்வளவு தான் கைநோக தேய்த்தாலும் அதில் உள்ள கறையை நீக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இனி கவலை வேண்டாம் ஒருவேளை ஏதாவது பாத்திரம் அடி பிடித்து விட்டால் அடிப்பிடித்த பாத்திரத்தின் கறையை நீக்க இந்த டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாருங்கள். கை வலிக்காமல் கறையை எளிதாக நீக்கிவிடலாம்.
தோசை ஊற்றும் போது கல்லில் ஒட்டிக்கொண்டு எடுக்க முடியவில்லையா? இந்த டிப்சை ஃபாலோ பண்ணுங்க!
1. வினிகர்:
அடிப்பிடித்த பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ஒரு கப் அளவு வினிகர் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை அடிப்பிடித்த உணவுகள், கருப்பு நிறங்கள் தனியாக வந்து இருப்பதை பார்க்கலாம் இப்பொழுது வழக்கமாக பயன்படுத்தும் சோப்பு கொண்டு துலக்கினால் எளிதாக கறை நீங்கிவிடும்.
2. உப்பு:
அடிப்பிடித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கை நிறைய உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் சூடானதும் அடிப்பிடித்த உணவு பண்டங்கள் பாத்திரத்தில் இருந்து விடுபடுவதை கண்கூடாக காணலாம். இப்பொழுது வழக்கமாக பயன்படுத்தும் சோப்பு அல்லது லிக்யூட் உடன் சிறிதளவு உப்பு சேர்த்து துலக்குங்கள் எளிதில் கறைகள் நீங்கிடும்.
3. வெங்காயத்தோல்:
தண்ணீரை அடிபிடித்து பாத்திரத்தில் நிரப்பி அதில் கொஞ்சம் வெங்காய தோலினை போட்டு அடுப்பில் வைத்து விடுங்கள். இதை அதிகமான தீயில் 20 நிமிடங்கள் வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து இதனை அடுப்பில் இருந்து எடுத்து எப்பொழுதும் பயன்படுத்தும் சாதாரண சோப்புக் கொண்டு துலக்குங்கள் கறைகள் விடுபட்டு விடும்.
4. சுடுதண்ணீர்:
உணவு அடிப்பிடித்தவுடன் உடனடியாக சுடு தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்துவிட்டால் பாத்திரத்தில் அடிப்பிடித்த உணவுகள் எளிதாக விடுபட்டு விடும். அதன் பிறகு சோப்புக்கொண்டு துலக்கலாம்.
5. பேக்கிங் சோடா:
அடிப்பிடித்த பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைக்க வேண்டும். சில மணி நேரங்கள் ஊறிய பிறகு பேக்கிங் சோடாவை ஸ்க்ரப்பில் எடுத்து வட்ட வடிவில் தேய்க்க கறை முழுமையாக விடுபட்டு விடும்.
இட்லி சாஃப்டாக வரவில்லையா? பஞ்சு போன்ற மென்மையான இட்லிக்கு இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
என்னதான் சமையல் அறையில் கவனமாய் இருந்தாலும் சில நேரங்களில் இது போல் நடப்பது இயல்புதான். பதட்டத்தில் அவசரமாய் பொருட்களை கையாலாமல் நிதானமாக செயல்படுங்கள்.