எப்பொழுதும் சமையல் அறையில் சில டிப்ஸ்களை அறிந்து அதனை பின்பற்றும் பொழுது வேலை நேரம் வெகுவாக மிச்சமாவதோடு நமக்கு வேலைப் பளு குறைந்தது போல் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே சில டிப்ஸ்களை தெரிந்து கொண்டால் போதும். வாருங்கள் அதுபோன்ற ஒரு சில டிப்ஸ்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா பூண்டின் தோல் உரிக்க நீங்க கஷ்டப்பட வேண்டாம்…!
எப்பொழுதும் அடுப்பில் பாலை வைத்துவிட்டு அது பொங்கி வழிந்து விடுமோ என்ற பயத்துடன் நின்று பார்த்துக் கொண்டே இருப்போம். நாம் சிறிதளவு கவனம் சிதறினாலும் அந்த நேரம் பார்த்து பால் பொங்கிவிடும். இவ்வாறு நிகழாமல் இருக்க பால் காய்ச்சும் பொழுது எப்பொழுதும் ஒரு கனமான கரண்டியை அதனுள் வைத்து விடுங்கள். பாதி அளவு பால் இருக்கும் பொழுது இது போன்ற கரண்டி வைப்பதால் பால் பொங்கி கீழே வழியாது.
கொத்தவரங்காய் பீன்ஸ் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஒன்று இரண்டாக நறுக்குவது மிக கடினமாக இருக்கும். எனவே அதில் உள்ள நார்களை நீக்கிய பிறகு மொத்தமாக பத்து காய்களை எடுத்து அதன் அடிப்பகுதியில் ஒரு ரப்பர் பேண்டை போட்டு விடுங்கள். இப்பொழுது உங்கள் கைகளில் பிடித்து கத்தியை வைத்து வேகமாக நறுக்கினால் ஒரே அளவில் அதே சமயம் சீக்கிரமாக அனைத்து காய்களையும் நீங்கள் நறுக்கி விடலாம்.
சமையல் செய்யும் பொழுது நாம் நம்முடைய கைகளை அடிக்கடி கழுவ வேண்டியது இருக்கும். அப்படி கைகளை கழுவி அதனை துடைக்க நாம் அணிந்திருக்கும் உடையில் துடைக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்படி செய்யாமல் அடுப்பு வைத்திருக்கும் மேடையில் ஒரு பகுதியில் டபுள் சைட் டேப்பை ஒட்டி இதில் ஒரு கிச்சன் டவலை ஒட்டி தொங்க விட்டு விடுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் கை துடைக்க வசதியாக இருக்கும்.
என்னதான் காய்கறிகள், கூட்டு, பொரியல் என்று செய்திருந்தாலும் சிலருக்கு அப்பளம் இருந்தால்தான் உணவு தொண்டைக்குள் இறங்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு தினமும் அப்பளம் பொறிப்பதால் எண்ணெய் அதிகம் செலவாகு.ம் அப்பளம் பொரிக்கும் பொழுது எண்ணெய் அதிகம் செலவாகாமல் இருக்க அப்பளத்தை நான்காக மடித்து உடைத்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் பொறிக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. குறைவான எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
சோளத்தில் உள்ள முத்துக்களை உரிப்பது என்பது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கலாம் சோலத்தில் உள்ள முத்துக்களை எளிதாக குறிக்க சோளத்தை ஒரு ஐந்து மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு உரிக்கும் பொழுது எளிதாக கைகளில் வந்து விடும் இவ்வாறு செய்து பாருங்கள்.