இன்றைய காலத்தில் ஆண், பெண், இளைஞர்கள் முதல் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரே பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது தான். அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுதல், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தல், உடற்பயிற்சி யோகா போன்றவற்றில் நாட்டம் இல்லாமையே இதற்கு முக்கிய காரணம். ஆனால் உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக பல வளர்ச்சிதை மாற்றங்கள் ஏற்பட்டு பல நோய் ஏற்பட காரணமாக அமைகிறது. உடல் எடை கட்டுக்குள் இருக்கும் பொழுது மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். அந்த வகையில் அனைவரும் உடல் எடை குறைத்து ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான ஐந்து உணவு பழக்க வழக்கங்களை இதில் பார்க்கலாம்.
பழங்களில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நீண்ட நேரத்திற்கு வயிறு திருப்தியாக இருக்கும். இதனால் இடை இடையே ஏற்படும் சிறுசிறு பசிகள் தவிர்த்து நொறுக்கு தீனி திங்கும் பழக்கம் குறைந்து விடும். அடுத்ததாக உடல் எடையை குறைக்கக்கூடிய சில பழங்களும் உள்ளது. இது நம் உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்றி விடுகிறது.
தக்காளி அதிகமாக உணவில் சேர்க்கும் பொழுது உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. காலையில் உள்ள அமினோ அமிலம் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும். ஆனால் நாம் தக்காளியை சமைத்து சாப்பிடாமல் அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும், அப்பொழுது மட்டுமே முழு பலன் கிடைக்கும்.
கலோரிகள் மிகக் குறைவாக உள்ள தர்பூசணியை அதிகப்படியாக சாப்பிடும் பொழுது உடல் எடை எளிதில் குறைக்க முடியும். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ரவை இல்லாத போது கேசரி சாப்பிட ஆசையா? ஒரு கப் அவல் போதும் அட்டகாசமான கேசரி தயார்!
ஆன்ட்டி ஆக்சிடென்ட், விட்டமின்கள், கொழுப்பை குறைக்கும் உட்பொருட்கள் கொண்ட எலுமிச்சை பழத்தை தினமும் ஒன்று என நம் உணவில் சேர்க்கும் பொழுது எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.
விட்டமின் சி, நீர்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஆரஞ்சு பழம் தினமும் ஒன்று சாப்பிடும் விதத்தில் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முந்தைய நாள் இரவே ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்து வரும் பொழுது உடலில் நல்ல மாற்றம் தெரியும்.