சமையலறையில் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா போதும் உங்கள் சமையலை எளிமையாக்கலாம்…!

சமையல் என்பது பெரும்பாலானோருக்கு மிக கடினமான வேலையாக இருக்கிறது. சமையல் என்பது காய்கறிகளை தோலை நீக்குதல், நறுக்குதல், சமைத்தல், சமைத்த‌ பிறகு சுத்தம் செய்தல் என பல்வேறு வேலைகளை உள்ளடக்கியது. இவை அனைத்தும் கடினமான வேலையாக தெரியும். இவற்றில் சில டிப்ஸ்களை பாலோ செய்தால் போதும் நாம் நம்முடைய சமையலை மிக எளிமையாக செய்துவிடலாம்.

காலை உணவுக்கு சுலபமா செய்யலாம் பஞ்சாப் ஸ்பெஷல் பட்டூரா பூரி…!

1. இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கும் பொழுது ஸ்பூன் வைத்து தோலை நீக்கினால் எளிமையாக இருக்கும். இஞ்சியின் பரப்பு சமமின்மையாக இருப்பதால் கத்தியோ, பீலரோ வைத்து இதன் தோலை நீக்குவது கடினமாக இருக்கும். எனவே ஸ்பூனை கொண்டு இதன் தோலை நீக்க முயற்சித்துப் பாருங்கள் மிக எளிமையாக நீக்கிவிடலாம்.

2. சமையலறையில் உபயோகிக்கும் கத்தியை கூர்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். கத்தி முறையாக இருந்தால் தான் காய்கறிகள் நறுக்குவதற்கு எளிமையாக இருக்கும்.

3. கூர்மை இன்றி மழுங்கிய கத்திகளை அடுப்படியின் மேடைகளில் படிக்கும் அழுக்குகளையோ இல்லை வேறு இடங்களில் படியும் அழுக்குகளையும் சுரண்டி எடுத்து சுத்தம் செய்து கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

4. வெல்லம் சிறிதளவு தூளாக தேவைப்பட்டால் அதை இடித்து தூளாக்குவது உங்களுக்கு சிரமமாக தோன்றலாம். எனவே அந்த வெல்லத்தை கேரட் துருவும் துருவியில் துருவிக் கொள்ளுங்கள். இது வேலையை எளிமையாக்கும்.

5. புதிதாக சமையல் செய்பவர்கள் சமையலை தொடங்கும் முன்பு ரெசிபியை முழுமையாக படித்த பிறகு சமையலை தொடங்க வேண்டும். என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே தயார் செய்ய வேண்டும். அதேபோல் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்துக் கொண்டு பின்பு சமையலை தொடங்கவும். இப்படி செய்வதால் கேஸ் பெருமளவு மிச்சப்படும்.