தயிர் சாதம் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சாதம். என்னதான் பிரியாணி போன்ற அசைவ உணவுகளுக்கு என்று ரசிகர்கள் இருந்தாலும் தயிர் சாதத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிலர் தினமும் கொடுத்தால் கூட அலுக்காமல் இந்த தயிர் சாதத்தை ருசித்து சாப்பிடுவார்கள்.
இந்த தயிர் சாதம் செய்வது என்ன பெரிய விஷயமா? தயிரையும் உப்பையும் சாதத்தோடு சேர்த்து பிசைந்தால் போதும் என்று நினைக்கலாம். ஆனால் இந்த தயிர் சாதத்தை இப்படி சில டிப்ஸ்களை பின்பற்றி செய்து பார்த்தால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
கோவில் பிரசாதம் சுவையில் சூப்பரான தயிர் சாதம்! வீட்டில் செய்து அசத்துங்கள்…
- தயிர் சாதம் செய்ய தயிர் உறைய வைக்கும் பொழுது அந்தப் பால் மிக சூடாகவும் இல்லாமல் அதிக குளிர்ச்சியாகவும் இல்லாமல் லேசான வெதுவெதுப்போடு இருக்க வேண்டும்.
- அதேபோல் பாலை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக வரும் வரை காய்ச்ச வேண்டும்.
- தயிர் சாதம் வழக்கமாக சாப்பிடும் அரிசியைவிட பச்சரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். அதுவும் அரிசியை நன்றாக குழைய விட வேண்டாம்.
- தாளிப்பின் பொழுது கடுகு, உளுந்தம் பருப்பு இவற்றோடு சிறிதளவு முந்திரி, கடலைப்பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கலாம்.
- மாதுளை முத்துக்கள், இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் துண்டுகள், திராட்சை பழங்கள் என உங்களுக்கு விருப்பமான சில பொருட்களையும் சேர்த்து செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
- தயிர் விரைவில் புளித்து விடும் என்று நினைத்தால் தயிர் சாதத்தோடு தயிருக்கு இணையாக பாலும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
- நேரம் செல்ல செல்ல தயிர் சாதம் கெட்டியாகி விடும். எனவே சற்று தளர இருக்கும்படி பிசைந்தால் தயிர் சாதம் சாப்பிடும் பொழுது சரியாக இருக்கும்.
- தயிர் சாதத்தோடு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
- தயிர் சாதத்தை ஆற வைத்து விடக்கூடாது. இளம் சூடாக இருக்கும் பொழுது சாப்பிடவும்.
- இந்த தயிர் சாதத்தோடு ஊறுகாய், உருளைக்கிழங்கு வருவல், மாவடு, மோர் மிளகாய் இதுபோல எந்த சைடிஷ் காம்பினேஷன் வைத்தாலும் அட்டகாசமாக இருக்கும்.