கிராமத்து சமையலில் தொடங்கி நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒவ்வொருவரும் சமைக்கும் ஒவ்வொரு உணவின் சுவைக்கும் தனி மவுசுதான். அந்த காலத்தில் அதிகமாக அம்மி, ஆட்டுக்கள்ளில் மாவு மற்றும் மசாலாக்கள் அரைத்து குழம்பு வகைகள் பலகாரங்கள் செய்து வீட்டில் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். ஆனால் இன்று எளிமையாக சமைக்கத் தொடங்கி சாப்பிடும் உணவில் ருசி மிகவும் குறைந்துவிட்டது. அதிலும் அவசர அவசரமாக சமைக்கும் பொழுது சில தவறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த சமையலை மீண்டும் அதே பக்குவத்தில் சிறப்பானதாக மாற்ற உதவும் எளிமையான சமையல் டிப்ஸ் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெயிலுக்கு இதமாக இருக்க வேண்டும் என நாம் அருந்தும் நீர் மோரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விற்கு பதிலாக மிளகு சீரகம் பொடி செய்து ஒரு முறை சேர்த்து பருகிப் பாருங்கள் இதன் சுபை சற்று வித்தியாசமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாதம், முட்டை சாதம், புளி சாதம் போன்ற கிளறு சாதங்களுக்காக நான் சாதம் தயார் செய்யும் பொழுது அதில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக நமக்கு கிடைக்கும்.
கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி இலை சாதம், புதினா சாதம் என சாதம் செய்யும் பொழுது அந்த சாதத்தை கிளரும் பொழுது பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறினால் இந்த சாதத்தில் நிறம் நன்கு பச்சையாகவும் சுவை சற்று கூடுதலாகவும் இருக்கும். பார்ப்பதற்கு கீரை சாதம் போல தோன்றினாலும் அதன் சுவையில் வித்தியாசம் தெரியும்.
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யும் பொழுது கத்தரிக்காயை எண்ணெயோடு சேர்த்து வதக்கும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து வதக்கினால் கத்திரிக்காய் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் குழம்பில் சுவையும் சற்று தூக்கலாக இருக்கும்.
நம் வீட்டில் எந்த வகையான ரசம் செய்தாலும் அதற்கு நல்லெண்ணெய் வைத்து தாளிப்பதை விட ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து தாளித்து ரசம் தயார் செய்யும் பொழுது அதன் சுவை முற்றிலும் வித்தியாசமாகவும் மனமாகவும் இருக்கும்.
புதினா சாதம், புதினா துவையல் என செய்யும் பொழுது அதன் இலைகளை கழுவி சுத்தம் செய்து எண்ணெயோடு சேர்த்து வதக்கி சமையல் செய்யாமல் இலையை பச்சையாக அரைத்து அதை வைத்து சமையல் செய்யும் பொழுது சுவையிலும் ஊட்டச்சத்திலும் குறைபாடு இல்லாமல் இருக்கும்.
நாம் உபயோகப்படுத்தும் சமையல் எண்ணெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் நான்கு அல்லது ஐந்து மிளகு சேர்த்து மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு சமையல் எண்ணெய் கெட்டுப் போகாமல் தூய்மையானது போல இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பொரியல் மொறுமொறுப்பாக இருக்க கிழங்கு வறுக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி பாசிப்பயிறு மாவு சேர்த்து சமைத்தால் கிழங்கு நல்ல முறுமுறுப்பாக பொன்னிறமாக மாறிவிடும். இதனால் கிழங்கு பொரியல் சுவையானதாக மட்டும் அல்லாமல் சத்து நிறைந்ததாகவும் மாறும்.
எந்த வகையான பாயாசம் செய்தாலும் அதன் நிலையில் தான் வாசனைக்காக எலக்காய் தூள் சேர்க்க வேண்டும். இதை அடுத்து பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்து கிளறி பாயாசத்தை இறக்கினான் அதன் வாசம் ஊரையே தூக்கும் அளவிற்கு மணமாக இருக்கும்.
நம் வீட்டில் விசேஷ நாட்களில் மைசூர் பாகு செய்யும் பொழுது கடலை பருப்பு அரைக்கும் நேரத்தில் வருத்தம் முந்திரியையும் சேர்த்து அரைத்து அந்த மாவு வைத்து மைசூர் பாகு செய்யும் பொழுது சுவை அபாரமாக இருக்கும்.