சமைக்கும் விதம் ஒன்று போல இருந்தாலும் சில நேரங்களில் சுவை மாறுபடுவது உண்டு. அதற்கு காரணம் சிலரின் கைப்பக்குவம். பக்குவமாக சில யுக்திகளை பயன்படுத்தி சமைக்கும் பொழுது சமையல் எளிதாகவும் சுவை அதிரடியாகவும் இருக்கும். நம் சமையலை மேலும் ஒரு படி உயர்த்துவதற்கு எளிமையான டிப்ஸ்கள் இதோ.
அசைவ குழம்புகளுக்கு தேங்காய் அரைக்கும் பொழுது அதனுடன் நான்கு அல்லது ஐந்து சின்ன வெங்காயம் அல்லது முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து குழம்பு வைத்தால் குழம்பு கெட்டியாகவும் மணமாகவும் கூடுதல் சுவையாகவும் இருக்கும்.
அசைவ குழம்பு இருக்கு தேவையான வெங்காயம் தக்காளி இரண்டையும் சரி பாகமாக பிரித்து ஒரு பகுதியினை வதைக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு அதிகமாக கிடைப்பதுடன் மணமாகவும் கூடுதல் ருசியாகவும் இருக்கும்.
இறால் குறித்து கழுவியதும் மோரில் ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாடை குறைந்துவிடும் சுவையும் கூடுதலாக இருக்கும்.
முட்டை பொடிமாஸ் செய்யும் பொழுது மிளகாய் க்கு பதில் மிளகாய் பொடி சேர்த்து செய்தால் சிறப்பாக இருக்கும்.
உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கையில் துர்நாற்றம் அடிக்காது.
வெண்பொங்கல் சூடாக இருக்கும் போது எவ்வளவு நெய் விட்டாலும் உள்வாங்கி விடும். பொங்கலை இறக்கி வைத்து ஆறியதும் உன்னை சேர்த்தால் நெய் குறைவாக சேர்த்தாலும் தாராளமாக இருப்பது போல சுவை கொடுக்கும்.
சமையல் செய்யும் பொழுது பாகற்காயை நறுக்கி அதில் தேவைக்கேற்ப எழுமிச்சை சாறு விட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து அதன் பின் சமைத்தால் துளி கூட கசப்பு தெரியாது.
புளி இல்லாமல் ரசமா? ஐந்தே நிமிடத்தில் பொரிச்ச ரசம் தயார் செய்யலாம்!
கருவேப்பிலை நிறைய கிடைக்கும் காலங்களில் காய வைத்து ரசப்பொடியோடு கலந்து வைத்தால் ரசத்திற்கு தனியாக கருவேப்பிலை போட வேண்டாம்.
கோதுமை, கம்பு, ராகி, பருப்பு வகைகளை நிலக்கடலை நவதானியங்கள் 200 கிராம் அளவு முந்திரி, சிறிதளவு சேர்த்து வறுத்து அரைத்தால் சத்து மாவு ரெடி.
தோசை மாவு நீர்த்திருந்தால் இரண்டு தேக்கரண்டி பாலில் ரவை அல்லது அரிசி மாவு சேர்த்து தோசை மாவில் கலந்து விடுங்கள். தோசை மாவு கெட்டியாக மாறிவிடும் புளிப்பும் குறைந்து விடும்.