சமையல் கலையில் சிறந்தவர்களாக நீடிக்க பல புதுவிதமான சமையல் கலை நுணுக்கங்களை அவ்வபோது தெரிந்து கொள்வது அவசியம். சமையலில் புதுமை நிகழ்ந்தால் மட்டுமே சுவை கூடுதலாகவும் சத்து நிறைந்ததாகவும் உணவை மாற்ற முடியும். சமையலில் சிறந்து விளங்குவதற்கான எளிமையான டிப்ஸ்கள் இதோ…
மாமிச உணவுகளான சிக்கன், மட்டன் வேக வைக்கும் பொழுது சீக்கிரம் வெந்து வருவதற்காக அதனுடன் சிறிய துண்டு பப்பாளியை சேர்த்து வேக வைக்கும் பொழுது கறி பூ போல மிருதுவாக வெந்துவிடும்.
சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சிலருக்கு நாக்கில் அரிப்பு ஏற்படும். அதற்கு கெட்டியான புளி கரைசலில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்த கலவையை சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு பொரிக்கும் பொழுது மசாலாவாக பயன்படுத்தினால் நாக்கில் அரிப்பு ஏற்படாது.
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் பொழுது தண்ணீரை மட்டும் பயன்படுத்தி மாவு தயார் செய்யாமல் ஒரு கப் பால் சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி மற்றும் பூரி சுவை கூடுதலாக இருக்கும்.
உருளைக்கிழங்கு மசியல் செய்யும் பொழுது அதில் சிறிதளவு ஓமம் சேர்த்து செய்தால் நல்ல வாசனையாக இருக்கும். மேலும் வாய்வு தொல்லை இருக்காது.
தக்காளி சாதம் செய்யும் பொழுது ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு தக்காளி, இஞ்சி இவற்றை ஒன்றாக அரைத்து அந்தத் தொக்கு வைத்து தக்காளி சாதம் செய்யும் பொழுது வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
காய்கறிகள் வதக்கும் பொழுது எண்ணெய் அதிகமாக பயன்படுத்திவிட்டால் கவலைப்பட வேண்டாம். அதில் கொஞ்சம் கொள்ளுமாவை தூவினால் எண்ணெயை உறிந்து விடும்.
ரசத்தில் புளிப்பு சுவை குறைந்தால் சிறிதளவு மாங்காய் பொடி சேர்த்து கிளறினால் புளிப்பு சுவை அருமையாக இருக்கும்.
எண்ணெய் பலகாரங்கள் செய்யும் பொழுது சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க என்னை சூடானதும் அதில் சிறிதளவு புலி அல்லது ஒரு சிறிய துண்டு இஞ்சி தட்டி சேர்த்து கரிய விட வேண்டும். அதன் பின் அதை எடுத்து அப்புறப்படுத்திவிட வேண்டும். அந்த எண்ணெயில் நாம் பலகாரங்கள் செய்யும் பொழுது நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேங்காய் சாதம் செய்யும் பொழுது அதில் சிறிதளவு வெள்ளை எள் வறுத்து பொடி செய்து கலந்தால் மனமாகவும் சுவையாகவும் இருக்கும்.
சமையலுக்காக வாழைப்பூ வாழைத்தண்டு நறுக்கி அப்படியே வெளியே வைத்து விட்டால் அதன் நிறம் மாறிவிடும். அதற்கு பதிலாக தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து அதனுள் நறுக்கிய காய்கறிகளை போட்டு வைக்கும் பொழுது நிறம் மாறாது.
தேங்காய் பால் எடுக்கும் பொழுது சிறிதளவு சமையல் உப்பு சேர்த்து தேங்காய் அரைத்து பால் எடுத்தால் பால் சற்று கூடுதலாக கிடைக்கும்.