சமையல் கலையின் நுணுக்கங்களை சிறப்பாக கற்றுக் கொள்ள யாருக்கும் தெரியாத ரகசியமான சமையல் டிப்ஸ்!

சமைக்கும் உணவில் சுவை அதிகரிக்கவும், அதன் நிறம் சற்று தூக்கலாக இருப்பதற்கும், வாசனை வீடு முழுக்க பரவி சாப்பிடுபவர்களின் மனதையும் வயிற்றையும் திருப்தி படுத்தும் விதத்தில் சமைக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனால் இப்படி சமைக்க பல நாள் கை பக்குவம் வேண்டும். புதிதாக சமைக்க ஆரம்பிக்கும் பலர் அதே கைப்பக்குவத்தில் சமைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அதற்காக சமையல் கலை நுணுக்கங்களை கற்றுத்தரும் சமையல் டிப்ஸ்கள் இதோ…

சப்பாத்திக்கு மாவு பிசைந்து நாம் பிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கும் பொழுது அப்படியே வைத்துவிட்டால் மாவின் மேல் நிறம் மாறிவிடும். அதற்கு பதிலாக ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அதன் உள்ளே பிசைந்த சப்பாத்தி மாவு, சிறிதளவு கோதுமை மாவு என கலந்து வைக்கும் பொழுது மாவின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

முருங்கைக்காய் வைத்து வறுவல், சாம்பார், குழம்பு, கூட்டு என சமைக்கும் பொழுது தேவையான வடிவில் காயை நறுக்கும்போது நடுவில் லேசாக கீறி விட்டு பிறகு சமைத்தால் அதில் உப்பு, காரம், புளிப்பு போன்ற மசாலா பொருட்கள் சேர்ந்து நன்கு சுவையாக இருக்கும்.

பொதுவாக வெந்தயக்கீரை சமைக்கும் பொழுது அதன் கசப்பு தன்மை குறைவாக இருக்க வெள்ளம் சிறு துண்டு சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் வைத்து கூட்டு பொரியல் செய்யும் பொழுது கொழ கொழப்பு தன்மை ஏற்படாமல் இருக்க வெறும் கடாயில் நாம் நடித்து வைத்திருக்கும் வெண்டைக்காயை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு வறுத்து எடுத்து அதன் பின் எண்ணை சேர்த்து சமைத்தால் வெண்டைக்காய் முறுமுறுவென சிறப்பாக இருக்கும்.

எந்த வகையான கீரை கூட்டு செய்யும் பொழுதும் இறுதியில் தேங்காய் பால் அரை கப் சேர்த்து செய்தால் சுவை சிறப்பாக இருக்கும்.

சூப் வகைகள் செய்யும் பொழுது ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவு கேழ்வரகு மாவு தண்ணீரில் கலந்து சூப்பில் சேர்த்து கொதிக்க வைத்தால் சூப் கெட்டியாகவும்,ஹெல்தியாகவும் இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் பொழுது தண்ணீர் ஊற்றி மாவு தயார் செய்யாமல் காய்ச்சி ஆற வைக்க பால் வைத்து தயார் செய்யும் பொழுது பூரி சுவையாகவும் எண்ணெய் குடிக்காமல் புசுபுசுவென வரும்.
ஊறுகாய் தாளிக்கும் பொழுது அதற்கு சேர்க்கும் குப்பை லேசாக வறுத்து அதன் பிறகு ஊறுகாயில் சேர்த்தால் விரைவில் கெட்டுப் போகாமல் இக்காமல் இருக்கும்.

தக்காளி சட்னி அரைத்தது சிறிதளவு வீழ்ந்து விட்டால் அதை உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணை கிழங்கு போன்ற கிழங்கு வறுவல் செய்யும் பொழுது அதனுடன் சேர்த்து சமைத்தால் சுவை அருமையாக இருக்கும்.

வெங்காயம் வதக்குவதற்கு எண்ணெய் குறைவாக ஊற்றி வதக்கும் பொழுது கடாயின் அடிப்பகுதிகளின் பிடிக்கும். வெங்காயமும் நன்றாக வதங்காது. அதற்கு சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் நன்கு வதங்கும் அதிக எண்ணையும் தேவைப்படாது.

தேங்காய் லட்டு செய்யும் பொழுது சர்க்கரைக்கு பதில் கன்டன்ஸ்டு மில்க் பவுடர் வைத்து செய்யும் பொழுது சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.

கடைகளில் ரொட்டித் துண்டு வாங்கி நான்கு ஐந்து நாட்கள் ஆனால் காய்ந்து போன மாதிரி ஆகிவிடும். அதற்கு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து மேல் அடுக்கு தட்டுகளில் ரொட்டி துண்டுகளை அடக்கி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் நீராவியில் வேகவைத்து எடுத்தால் பிரட் துண்டுகள் மிருதுவாக மாறிவிடும்.

நெய் கடையில் வாங்கினாலோ அல்லது வீட்டில் காய்ச்சி தயார் செய்தாலோ ஒரு மாதத்தில் அதன் வாசனை குறைய தொடங்கும். அந்த நேரத்தில் ஒரு சிறிய துண்டு கருப்பட்டி, அச்சு வெல்லத்தை நெய்யில் சேர்த்து கலந்து வைத்தால் மீண்டும் வாசனையாக இருக்கும்.