இனிமேல் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செஞ்சு இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைச்சு பாருங்க…!

நம்முடைய அன்றாட சமையலில் கட்டாயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் இடம் பிடித்து விடும். பெரும்பாலான இந்திய உணவுகளுக்கு இஞ்சி பூண்டு விழுது அவசியம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அசைவ உணவுகளில் இஞ்சி பூண்டு விழுது மிகவும் முக்கியம். இஞ்சி பூண்டு விழுது சமையலில் சுவையையும் மணத்தையும் இரட்டிப்பாகுகிறது. இந்த இஞ்சி பூண்டு விழுதை நாம் சமைக்கும் நேரத்தில் அவ்வபோது தயாரித்து பயன்படுத்துவது வழக்கம். இருப்பினும் இதனை முன்கூட்டியே அரைத்து வைத்து பயன்படுத்தினால் நேரம் பெருமளவு மிச்சம் ஆகும். வாருங்கள் இந்த இஞ்சி பூண்டு விழுதை எப்படி தயார் செய்வது என்ற டிப்ஸ்களை பார்ப்போம்.

  1. இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்யும் பொழுது எப்பொழுதும் ஒரு பங்கு இஞ்சி மற்றும் இரண்டு பங்கு பூண்டு என்று எடுத்துக் கொள்வது நல்லது. 100 கிராம் இஞ்சிக்கு 200 கிராம் பூண்டு என்று எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை சீவி துண்டுகளாக நறுக்கி பயன்படுத்தவும். அதே போல் பூண்டையும் தோல் நீக்கி சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. இஞ்சி பூண்டு விழுது அரைக்க தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. அப்படியே அரைத்தால் போதுமானது.
  4. இஞ்சி பூண்டு விழுதை நன்றாக அரைத்த பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் கலந்து வைக்க வேண்டும். உப்பு மற்றும் எண்ணெய் சேர்ப்பதால் இந்த இஞ்சி பூண்டு விழுது நீண்ட நாட்களுக்கு வரும்.
  5. எப்பொழுதும் இஞ்சி பூண்டு விழுதை காற்றுப்புகாதவாறு கண்ணாடி பாட்டில்களில் வைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இது நீண்ட நாட்களுக்கு வரும்.

மேற்கண்ட டிப்ஸ்களை பாலோ செய்து இஞ்சி பூண்டு விழுதை தயார் செய்து வைப்பதால் அது நீண்ட மாதங்களுக்கு கெடாமல் நன்றாக இருக்கும். கடைகளில் வாங்கும் இஞ்சி பூண்டு விழுதை விட இது பாதுகாப்பானது மற்றும் சுத்தமானது. எனவே அனைத்து வகையான உணவுகளுக்கும் பயன்படுத்தக்கூடிய இந்த இஞ்சி பூண்டு விழுது இனி இவ்வாறு தயார் செய்து பயன்படுத்துங்கள்.