உங்கள் கேஸ் ஸ்டவ்வின் பர்னரை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்…!

காலை எழுந்ததும் காபி போட தொடங்கி இரவு பால் ஆற்றும் வரை பெரும்பாலான நேரங்களில் நாம் கையாளும் ஒரு முக்கியமான பொருள் கேஸ் ஸ்டவ். சமையலறையில் தினமும் பாத்திரங்களை கழுவி அழுக்கு நீக்கி சுத்தமாக வைத்திருப்பதைப் போல கேஸ் ஸ்டவ்வையும் அவ்வப்போது சுத்தம் செய்து வைத்தல் மிகவும் அவசியம். கேஸ் ஸ்டவ் கவனமாகவும் அதே சமயம் சுத்தமாகவும் கையால வேண்டிய ஒன்று. என்னதான் தினமும் அடுப்பை சோப்பு தண்ணீர் கொண்டு கழுவினாலும் அதன் பர்ணரை பெரும்பாலும் கவனிக்க தவறி விடுவோம்.

இனி ரசம் வைக்கும் பொழுது இந்த டிப்ஸ்களை ஃபாலோ செஞ்சு ரசம் வைத்து பாருங்கள்…!

பர்னரில் ஏதேனும் அடைப்பு இருந்தால் ஒழுங்காக எரியாது இதனால் கேசும் நிறைய விரயம் ஆகும் வாய்ப்பு உண்டு. எனவே பர்ணரை அவ்வப்போது அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்று பார்த்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அடுப்பு வாங்கிய புதிதில் பர்னர் வெண்கல நிறத்தில் இருக்கும். நாள் ஆக ஆக பர்னரின் நிறம் மாறி கருப்பு நிறத்தில் மாறிவிடும். பர்ணர் எப்பொழுதும் புதிது போல அதே பளபளப்புடன் ஜொலிக்க வேண்டும் என்றால் இதோ இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். அப்பொழுது வாங்கியது போல பளபளப்பாய் தெரியும்.

1. ஒரு பாத்திரத்தில் பர்னரை வைத்து அதில் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். பிறகு அதில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்கள். ஈனோ பாக்கெட் இரண்டை அதில் சேர்க்கவும். இதனை சில நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விடவும். சில நிமிடங்களுக்குப் பிறகு பாத்திரம் விளக்கும் ஸ்க்ரப்பால் இந்த பர்ணரை தேய்க்க அதில் உள்ள கருப்பு நிறம் முழுமையும் மாறி புதிது போல காட்சியளிக்கும்.

2. நெல்லிக்காய் அளவு புளியை எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து இந்த புளியை சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து அதில் பர்ணரை சேர்க்கவும். இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவும். மறுநாள் இதனை பேக்கிங் சோடா கொண்டு தேய்த்து கழுவினால் பளபளப்பாகிவிடும்.

3. ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள் அதில் பர்னரை சேர்த்து சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் அளவு வினிகர் சேர்த்து கலந்து விடுங்கள். அப்படியே இதனை இரவு முழுவதும் வைத்து விடலாம். மறுநாள் எலுமிச்சையின் தோல் கொண்டு இதனை தேய்த்து கழுவினால் இது பளபளப்பாக இருக்கும்.

உங்கள் சமையல் வேலையை எளிதாக்கும் சூப்பரான கிச்சன் டிப்ஸ்கள்…!

அடுப்பில் பர்னர் பளபளப்பாக இருந்தால்தான் அடுப்பு புதிது போல எப்பொழுதும் காட்சி தரும். இந்த டிப்ஸ்களை பின்பற்றி உங்கள் பர்ணரை பளபளப்பாக்குங்கள். அடுப்பை புதிது போல காட்சியளிக்க செய்யுங்கள்.