நம் வீடு பார்ப்பதற்கு எப்போதும் புதிது போலவே தோன்ற வேண்டுமா? அருமையான வீட்டு குறிப்புகள்!

நாம் புதிதாக வீடு கட்டும் பொழுது இருக்கும் பளபளப்பு நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும். அதை முறையாக பராமரிக்கும் போது மட்டுமே அதே பளபளப்புடன் புதிது போன்ற பொலிவுடன் இருக்கும். அதற்கு பல அசத்தலான டிப்ஸ்களை நாம் பயன்படுத்தி வீட்டை நாம் சிறப்பாக பராமரிக்க வேண்டும்.

நாம் வீடு துடைக்கும் பொழுது கண்ணீருடன் ஒரு மூடி டெட்டால் இருக்கு ஐந்து சொட்டு மண்ணெண்ணெய் சேர்த்து கலந்து வீட்டை துடைக்கும் பொழுது வீட்டில் உள்ள கிருமிகள் எளிதில் அழிந்துவிடும். டெட்டால் சேர்த்து தண்ணீருடன் கலந்து சுத்தம் செய்வதால் மண்ணெண்ணெய் வாடை சுத்தமாக வராது.

சமையலுக்காக அதிகப்படியாக கொத்தமல்லி தலை வாங்கி பதப்படுத்தும் பொழுது அதை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்தால் சில நாட்களில் அழுகிவிடும். அதற்கு பதிலாக கொத்தமல்லி தலையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு டப்பாவில் அடைத்து அதன் மேல் ஒரு வெள்ளை துணி போட்டு மூடி வைக்கும் பொழுது எளிதில் அழுகாது. டப்பா முடியிலிருந்து வரும் தண்ணீர் துணியில் தேங்குவதால் கொத்தமல்லி புதிது போல அருமையாக இருக்கும்.

நாம் பயன்படுத்தும் மிக்ஸியில் ஜார் பழையதாக மாறிவிட்டால் அரைக்கும் பிளேடுகளில் கூர்மை குறைந்து விடும். அதை பராமரிப்பதற்காக பழையதாக மாறி உள்ள மிக்ஸர் ஜாரில் கைப்பிடி அளவு கல் உப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி, எலுமிச்சை பழ தோல் சேர்த்து அரைக்கும் போது பிளேடுகள் சற்று கூர்மையாக மாறிவிடும். மேலும் பிளேடுகளுக்கு அடியில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் சுத்தமாக மாறிவிடும்.

நாம் பாத்திரம் தேய்க்கும் பொழுது பாத்திரம் தேய்க்கும் லிக்விட் உடன் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்து பாத்திரம் கழுவும் பொழுது பாத்திரம் பல பழவ என புதிது போல இருக்கும்.

விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் பால் பாயாசத்தை மேலும் விசேஷமாக மாற்ற வேண்டுமா? வாங்க புரோட்டீன் சத்து நிறைந்த மக்கனா வைத்து அசத்தல் பால் பாயாசம்!

நாம் சமைக்கும் அடுப்பு மேடை பிசுபிசுப்பு இல்லாமல் இருப்பதற்கு பாத்திரம் கழுவும் லிக்வர்ட், ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி சமையல் சோடா, ஒரு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து அடுப்பு மேடை முழுவதும் தெளித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பொழுது பளபளவென புதிது போல மாறிவிடும்.

பூஜை பொருள் பளபளப்பாக மாற ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு செம்பு தண்ணீர், ஒரு தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட், அரை தேக்கரண்டி கல்லுப்பு, ஒரு தேக்கரண்டி பல் துலக்கும் கோல்கேட் பவுடர் இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த திரவம் வைத்து வழு வழு என எண்ணெய் பிசுப்புடன் இருக்கும் பூஜை பாத்திரமும் பளபளவென மாறிவிடும்.