இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமே சட்னி கச்சிதமான பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த முறை நாம் செய்யும் ஒரு சட்னி இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமில்லாமல் சாதத்துடன் வைத்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். வாங்க இந்த முறை கத்திரிக்காய் சட்னி நம் வீட்டில் புதுவிதமாக செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு அகலமான கடாயின் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நான்கு தக்காளி பழங்களில் அப்படியே எண்ணெயின் மீது வைத்துவிட வேண்டும். இதனுடன் புதிதாக நறுக்கிய இரண்டு கத்திரிக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதை மூடி போட்டு அப்படியே ஐந்து முதல் 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். எண்ணையுடன் கத்தரிக்காய் மற்றும் தக்காளி நன்கு வெந்து வரவேண்டும். அதன் பிறகு கத்திரிக்காய் மற்றும் தக்காளியை மசித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து தனியாக எடுத்து வைத்து விடலாம்.
அடுத்ததாக மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி, காய்ந்த வத்தல் நான்கு, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நாம் முதலில் வதக்கிய தக்காளியை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் தாளித்து வைத்திருக்கும் கலவையையும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதை நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
கோதுமை, ரவை சேர்க்காமல் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் பாசிப்பருப்பு தோசை!
நாம் முதலில் வதக்கிய கத்திரிக்காயின் நன்கு மசித்து கொள்ள வேண்டும். கத்திரிக்காய் மசியலுடன் நாம் அரைத்த சட்னியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக தேவைப்பட்டால் ஒருமுறை உப்பு சரிபார்த்துக் கொள்ளலாம். சுவை கூடுதலாக வேண்டும் பட்சத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது சுவையான கத்திரிக்காய் சட்னி தயார். இந்த சட்னி இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமில்லாமல் சாதத்துடன்சைந்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும். எந்த குழப்பம் இல்லாமல் இந்த ஒரு சட்னி போதும் பல நேர சமையலை எளிமையாக முடித்து விடலாம்.