வீட்டில் என்ன தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் ரெஸ்டாரன்ட் சுவையை தொடுவது சற்று கடினம் தான். அதற்கு அங்கு பயன்படுத்தும் சில வகையான மசாலாக்களும் சில கைதேர்ந்த நுணுக்கங்களும் தான் உணவின் சுவைக்கு முக்கிய காரணம். நாம் சமைக்கும் ஒவ்வொரு உணவும் ரெஸ்டாரன்ட் போல சுவையானதாகவும் மணமானதாகவும் மாற்றுவதற்கு உதவும் எளிமையான சமையல் டிப்ஸ் இதோ..
சிக்கன் 65 பொறிப்பதற்கு சிக்கனுடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போன்ற மசாலா பொருட்களை சேர்க்கும் பொழுது அதனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு நாம் எண்ணெயில் பொரித்து எடுத்தால் அந்த சிக்கன் சற்று வாசனை கூடுதலாகவும் சுவையில் அமிர்தமாகவும் இருக்கும்.
அதேபோல் மீன் வருவல் செய்யும் பொழுதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து மீனின் மீது நன்கு தடவி தேங்காய் எண்ணெயில் பொறித்தால் சற்று வாசனையாக இருக்கும். குறிப்பாக நாம் பொரித்து எடுத்த மீனின் மீது ஆம்சூர் பவுடர் மலைச்சாரல் போல லேசாக தூவி பரிமாறினாள் சிறப்பாக இருக்கும்.
ஆட்டுக்கால் பாயா சமைக்கும் பொழுது தாயாவின் சுவை சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு தேக்கரண்டி சோம்பு வை ஆட்டுக்கல்லில் நன்கு இடித்து அந்த பொடியை குழம்புடன் சேர்த்து சமைக்கும் பொழுது வாசனை கூடுதலாகவும் சுவை அருமையாகவும் இருக்கும்.
தேவைக்கு அதிகமாக நாம் பூண்டு தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துவிட்டால் அதை வீணாக போடாமல் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சேகரிக்கலாம். அந்த கண்ணாடி பாத்திரத்தில் சமையல் எண்ணெய் ஊற்றி வைத்தால் பூண்டு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
வீட்டில் அரைத்த தோசை மாவு அல்லது கடையில் வாங்கிய தோசை மாவாக இருந்தாலும் சரி இட்லி மிருதுவாக வர வேண்டும் என நினைத்தால் அந்த தோசை மாவில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த மாவு வைத்து இட்லி செய்யும் பொழுது பஞ்சு மாதிரியான இட்லி கடை இட்லி கிடைக்கும்.
ஆசையாக பிரியாணி சமைக்கும் பொழுது அதில் உப்பு சற்றே கூடுதலாக அதிகரித்து விட்டால் பிரியாணி முழுமையாக சமைத்த பிறகும் கூட பாதி அளவு எலுமிச்சை பழ சாறு கொட்டைகளை நீக்கி பிழிந்து கொள்ள வேண்டும். இந்த சாறை நாம் சமைத்து வைத்திருக்கும் பிரியாணியின் ஒரு சேர ஊற்றி நன்கு கிளறி கொடுத்தால் உப்பின் சுவை குறைந்து பிரியாணியின் சுவை அதிகரிக்கும்.
வீட்டில் இட்லி மற்றும் தோசைக்காக சைடிஸ் ஆக பொடி தயார் செய்யும் பொழுது அதில் கருவேப்பிலை அதிகமாக வறுத்து சேர்த்து பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். மேலும் இந்த பொடியை சிறப்பானதாக மாற்றுவதற்கு எள் அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைத்து நல்ல உணவாக மாறிவிடும்.