மழைக்காலத்திலும் சரி, அதிகப்படியான வெயில் காலத்திலும் சரி பலருக்கு சளி பிடித்து தொல்லை ஏற்படுத்துகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக ஏற்படும் இந்த சளி தொல்லையை வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை வைத்து சூப் செய்து குடித்து சரி செய்யலாம் வாங்க. அதற்காக நாட்டுக்கோழி வைத்து அருமையான காரசாரமான சூப் ஒன்று செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த சூப் செய்வதற்கு நாட்டுக்கோழிக்கறியில் எலும்பாக கால் கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை இரண்டு துண்டு, கிராம்பு மூன்று, ஏலக்காய் 3, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, பிரியாணி இலை இரண்டு, கடல்பாசி ஒரு துண்டு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
இதை அடுத்து பத்து முதல் 15 சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்தில் வதங்கியதும் இரண்டு பழுத்த தக்காளி பழத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்ததும் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எண்ணெயுடன் சேர்ந்து நாட்டுக்கோழி குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடமாக வதக்க வேண்டும்.
இதை அடுத்து அரை தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை செல்லும் வரை மிதமான தீயில் நாட்டுக்கோழியை கிளறி கொடுக்க வேண்டும்.
அந்த நேரத்தில் மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், காலத்திற்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி மல்லி சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பாட்டி கை பக்குவத்தில் அருமையான மாலை நேர பலகாரம்! காரசாரமான தட்டை ரெசிபி இதோ!
வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் நாம் வறுத்து அரைத்திருக்கும் இந்த பொடியை குக்கரில் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
நாம் வறுத்து அரைக்கும் இந்த பொடி மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை சற்று பரபரன இருந்தால் போதுமானது. அதன் பின் குக்கரில் ஒன்றுக்கு மூன்று மடங்கு தண்ணீர் வைத்து நான்கு முதல் ஐந்து விசில்கள் வரை வேக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் எழும்பில் உள்ள சாறு நன்கு இறங்கி சூப் சுவையாக இருக்கும்.
விசில்கள் வந்ததும் குக்கரின் அழுத்தம் குறைந்த பின் பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய மல்லி இலைகள் தூவி பரிமாறினால் நாட்டுக்கோழி சூப் சிறப்பாக இருக்கும்.