பிரபல சமையல் கலைஞர் தாமு அவர்களின் கைப்பக்குவத்தின் செட்டிநாடு சிக்கன் மசாலா சாப்பிட வேண்டுமா? ரெசிபி இதோ…

பிரபல சமையல் கலைஞர் தாமு தற்பொழுது சின்ன திரை தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று மக்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பலவிதமான உணவு முறைகளை செய்து ரசிகர்களை அசத்தி வருகிறார். அவரின் கைப்பக்குவத்தில் சாப்பிட வேண்டும் என அனைவருக்கும் ஆசை இருக்கும். அவரின் பிரபலமான ரெசிபிகளில் ஒன்றான செட்டிநாடு சிக்கன் மசாலாவை தாமுவின் கை பக்குவத்தில் நம் வீட்டிலேயே செய்வதற்கான விளக்கம் இதோ…

முதலில் செட்டிநாடு சிக்கன் மசாலா செய்வதற்கு மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.. அதற்காக ஒரு அகலமான போன்றவை தேக்கரண்டி தனியா, காரத்திற்கு ஏற்ப மூன்று முதல் 5 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து முதலில் படுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு மராட்டி முக்கு, ஏலக்காய் மூன்று, சிறிதளவு ஜாதிப்பத்திரி, அரை தேக்கரண்டி மிளகு, கிராம்பு ஐந்து, இரண்டு சிறிய துண்டு, அண்ணாச்சி பூ, நான்கு துண்டு பட்டை, இரண்டு பிரியாணி இலை, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வெறுமையாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்களின் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா தயாராக உள்ளது.

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு ஏலக்காய்,, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நன்கு பழத்தை இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.

ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை வீட்டிலேயே சாப்பிட வேண்டுமா? ஸ்பெஷல் ரெசிபி இதோ…

இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு கப் சிக்கனை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து இந்த கலவையை நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

சிக்கன் வெந்து வருவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடம் இந்த கலவையை கொதிக்க வைக்க வேண்டும். அன்பின் அதன் பின் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் சேர்த்து கொள்ளலாம். மசாலா சேர்த்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் சமைத்தால் போதுமானது.

இப்பொழுது சமையல் கலை செஃப் தாமுவின் கைப்பக்குவத்தில் செட்டிநாடு சிக்கன் மசாலா தயார். பரிமாறுவதற்கு முன்பாக கைப்பிடி அளவு கொத்தமல்லி தலை தூவி பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும்.