கோடைகால பருவம் துவங்கிவிட்டது. இனி மணி கணக்கில் சமையலறையில் நின்று சமையல் செய்ய யாரும் பொதுவாக விரும்புவதில்லை. அதற்கு பதிலாக எளிமையான முறையில் சுவையான சமையலை செய்து அச்சத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி உதவியாக இருக்கும். குறிப்பாக அடிக்கடி தயிர்சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் என சாத வகைகள் செய்பவர்களுக்கு இந்த தொக்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். வாங்க நல்ல காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்..
முதலில் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நல்ல பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதை சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக அதே கடாயில் தாராளமாக இரண்டு தேக்கரண்டி அல்லது ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கைப்பிடி அளவு பச்சை மிளகாயை இரண்டாக கீரி எண்ணெயில் வதக்க வேண்டும். இதனுடன் 15 முதல் 20 சின்ன வெங்காயம், 10 பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து 7 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது நாம் அழகிய பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நாம் முதலில் வருத்து பொடி செய்து வைத்திருக்கும் கடுகு மற்றும் வெந்தய பொடி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான தாளிப்பு ஒன்றை தயார் செய்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஆக எளிமையான முறையில் கிள்ளி போட்ட மண மணக்கும் சாம்பார்!
ஒரு குட்டி கடாயில் 50 கிராம் நல்லெண்ணெய், 5 காய்ந்த வத்தல், இரண்டு கொத்து கறிவேப்பிலை, அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 5 பல் வெள்ளைப் பூண்டு சேர்த்து லேசாக வதக்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தொக்கு சேர்த்து கிளற வேண்டும்.
இதனுடன் பெரிய எலுமிச்சை பல அளவு புளி கரைசல் கெட்டியாக சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும் சுவையான பச்சை மிளகாய் தொக்கு தயார்.