முடி கொட்டுதல் மற்றும் இளநரைக்கு ஒரே தீர்வாகும் கருவேப்பிலை ஊறுகாய் ரெசிபி!

முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு பொதுவாக உடலில் அயன் சத்து குறைபாடு மிகவும் காரணமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் அருகில் எளிமையாக கிடைக்கும் கருவேப்பிலை இதற்கு ஒரு நல்ல தீர்வாக அமையும். இந்த கருவேப்பிலையை உணவில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையான ஊட்டச்சத்து கிடைத்து இளநரை, முடி கொட்டுதல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வாங்க மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப்போகாத கருவேப்பிலை ஊறுகாய் செய்வதற்கான ரெசிபி விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் ஒரு கடாயில் கால் தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி கடுகு சேர்த்து வறுக்க வேண்டும். கடுகு பொரிந்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து மற்றொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை மொறுமொறுவென வரும் வரை நன்கு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மூன்று காய்ந்த வத்தல், சிறிய நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்து நல்ல வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். அரைக்கும் போது இதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கக்கூடாது.

இந்த சீசனுக்கு மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க…. அசத்தலான மற்றும் புதுவிதமான சட்னி ரெசிபி!

அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 5 பல் வெள்ளை பூண்டுவை தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், நாம் முதலில் வறுத்து அரைத்த மசாலா இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி, அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அருமையான கருவேப்பிலை ஊறுகாய் தயார்.

சூடான சாதத்தில் இந்த ஊறுகாய் சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான கருவேப்பிலை சாதம் நொடியில் தயாராகிவிடும். மேலும் இந்த ஊறுகாய் குறைந்தது மூன்று மாதம் ஆனாலும் கெட்டுப் போகாததால் நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம்.