முருங்கைக்காய் வைத்து காரத்திற்கும் புளிப்பிற்கும் குறைவே இல்லாத அட்டகாசமான புளித்தொக்கு ரெசிபி!

முருங்கைக்காய் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்து அசத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த விளக்கம் மிக உதவியாக இருக்கும். பொதுவாக முருங்கைக்காய் வைத்து சாம்பார், பொரியல் என செய்து வந்த நமக்கு இந்த காரமான முருங்கக்காய் புளி தொக்கு ரெசிபி சற்று வித்தியாசமாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும். வாங்க எளிமையான முறையில் நம் வீட்டில் காரசாரமான முருங்கைக்காய் புளி தொக்கு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் இரண்டு முருங்கை காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய் களை எண்ணெயோடு கலந்து நன்கு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதே கடாயில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அரை தேக்கரண்டி சீரகம், நான்கு காய்ந்த வத்தல், இடித்த வெள்ளை பூண்டு ஐந்து சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். அடுத்ததாக பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் வதங்கி வரும் நேரத்தில் 3 தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி அரைத்த விழுதுகளை கடாயில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பாண்டிச்சேரி ஸ்பெஷல் சிக்கன் மக்ரோனி! ஸ்பைசியான ரெசிபி இதோ…

இதற்காக காஷ்மீரி மிளகாய் தூள் அரைத்துக்கரண்டி, குழம்பு மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

அடுத்ததாக நாம் எண்ணையில் பொறுத்து வைத்திருக்கும் முருங்கை காய்களை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கூடுதலாக எலுமிச்சை பல அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்து மீண்டும் கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இறுதியாக கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி அச்சு வெல்லம் சேர்த்து கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான முருங்கக்காய் புளி தொக்கு தயார்.