பிரியாணி உடன் போட்டி போடும் சுவையில் மசாலா அதிகமாக சேர்க்காத ஹைதராபாத் ஸ்பெஷல் மட்டன் தகாரி!

மட்டன் வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்தாலும் மட்டன் பிரியாணிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. நல்ல பக்குவமாக வெந்திருக்கும் மட்டன் மற்றும் மசாலாவுடன் வைத்து சாப்பிடும் பொழுது அந்த பிரியாணிக்கு தனி மவுசுதான். இந்த முறை அதிகமான மசாலாக்கள் பயன்படுத்தாமல் பிரியாணி உடன் போட்டி போடும் சுவையில் ஹைதராபாத் ஸ்பெஷல் மட்டன் தகாரி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

முதலில் பிரியாணி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 5 கிராம்பு, மூன்று ஏலக்காய், பட்டை இரண்டு துண்டு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், இரண்டு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக கைபிடி அளவு புதினா இலைகள், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்க வேண்டும்.

கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் லேசாக வதங்கியதும் இரண்டு ஆக நறுக்கிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய நேரத்தில் அரை கிலோ அளவுள்ள சுத்தம் செய்த மட்டன் கறியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் இரண்டு தக்காளி பழம் பொடியாக நறுக்கியது சேர்த்து குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, அரை கப் வெட்டி தயிர் சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கிராமத்து ஸ்பெஷல் தட்டப்பயிறு கருவாட்டு குழம்பு!

மட்டன் பாதியாக வெந்து கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் நேரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு குறைந்தது 20 நிமிடத்திற்கு மேலாக மட்டனை வேக வைக்க வேண்டும். அடுத்ததாக மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை மணி நேரம் ஊறவைத்த பாஸ்வதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக ஒரு பாதி அளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குக்கராக இருந்தால் இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது பூ போல உதிரி உதிரியான கொலையாத பாஸ்மதி அரிசி மட்டன் தகாரி தயார்.