பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. ஊரே மணக்கும் பலாப்பழம் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் விதத்தில் மஞ்சள் நிறத்தில் கமகம வாசனையுடன் சுவை சிறப்பாகவே இருக்கும். இந்த முறை பலாப்பழம் அப்படியே சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக ஐஸ்கிரீம் செய்து குளுகுளு ஐஸ் கிரீம் ஆக குழந்தைகளுக்கு விதத்தில் எளிமையான முறையில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க….
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த பலாப்பழ சுலைகள் 10 எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் பிரஷ் கிரீம் சேர்த்து நன்கு விழுதுகளாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு கடாயில் இரண்டு கப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் பால் பவுடர், ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை கெட்டியாக வரும் வரை மிதமான தீயில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
அடுத்ததாக இதை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டையும் தொடர்ந்து ஐந்து நிமிடம் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் உளுந்து என எதுவும் ஊற வைக்காமல் ஐந்தே நிமிடத்தில் பஞ்சு மாதிரியான தோசை!
அடுத்ததாக இந்த கலவையை ஃப்ரிட்ஜில் குறைந்தது 12 மணி நேரம் குளிர வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான பலாப்பழ ஐஸ்கிரீம் தயார். எந்தவித இரசாயன பொருளும் சுவைக்கான கலப்படமும் சேர்க்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் சுவையான ஐஸ்கிரீம் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.