சிக்கன், மஸ்ரூம், பன்னீர், உருளைக்கிழங்கு, சோயா, முட்டை என எது கிடைத்தாலும் ஒரே ரெசிபி தான்!

நாம் இப்பொழுது செய்யும் ரெசிப்பி பக்குவம் ஒரே மாதிரியாக இருந்தாலும் சுவைக்கு ஏற்ப நாம் பன்னீர் அல்லது உருளைக்கிழங்கு, சோயா, முட்டை, சிக்கன் என விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அதே பக்குவத்தில் செய்து அருமையான சுவையை பெற முடியும். வாங்க டேஸ்டியான கீமா மசாலா செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம். நாம் இந்த முறை சீமா மசாலாவை சோயா பயன்படுத்தி செய்வதற்கான விளக்கம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பாத்திரத்தில் காரத்திற்கு ஏற்ப 10 காஷ்மீரி மிளகாய், 10 முந்திரி சேர்த்து வெந்நீர் கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சோயாவிற்கும் தேவையான அளவு வெந்நீர் மற்றும் உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். சோயா நன்கு வெந்நீரில் ஊறியதும் தண்ணீர் பிழிந்து தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அடைத்து உதிரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி மல்லி, இரண்டு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி கடுகு, இரண்டு ஏலக்காய் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

வருத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் 5 பல் வெள்ளை பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி ஊறவைத்த காஷ்மீரி மிளகாய் மற்றும் மற்றும் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு மை போல அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

இதுல கூட சட்னி செய்யலாமா? வியப்பை தரும் வகையில் சுவையான மற்றும் வித்தியாசமான சட்னி ரெசிபிகள்!

இப்போது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு கொத்து கருவேப்பிலை , அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரைத்த விழுதுகளை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் கலந்து கடாயில் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட வேண்டும். அடுத்ததாக நாம் வேகவைத்து உதிர்த்து வைத்திருக்கும் சோயாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் உப்பு சரிபார்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மசாலாவுடன் சோயா இணைந்து கெட்டி பதத்திற்கு வரும்பொழுது கைப்பிடி அளவு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான சோயா கீமா மசாலா தயார்.