வீட்டில் என்ன தான் பார்த்து பார்த்து வித விதமாக காய்கறிகள் சேர்த்து பக்குவமாக சாம்பார் வைத்தாலும் கடைகளில் கிடைக்கும் சாம்பாருக்கு தனி சுவைதான். வீட்டிலும் அதேபோல சாம்பார் சமைக்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும். இந்த முறை கடைகளில் கொடுக்கும் சாம்பார் போல மசாலா அரைத்து வீட்டில் சாம்பார் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் ஒரு குக்கரில் நமக்கு தேவையான துவரம் பருப்பு சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும். பருப்பு வேக வைக்கும் பொழுது அதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்.
பருப்பு வெந்து வரும் நேரத்தில் குழம்பிற்கு தேவையான வெங்காயம், தக்காளி போன்ற காய்களை நறுக்கிக் கொள்ளலாம். பருப்பு வெந்ததும் மத்து கொண்டு நன்கு மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கொள்ள வேண்டும் .
எண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். அடுத்ததாக பெரிய அளவில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் 2, காய்ந்த வத்தல் நான்கு, இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் நான்கு, தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி சீரகம், வெள்ளைப்பூண்டு 3 சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
அரைத்து விழுதுகளை வெங்காயம் வதங்கிய பிறகு கடாயில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொடுத்து ஒரு கொதி வந்த பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், தேக்கரண்டி சாம்பார் தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சோடா உப்பு சேர்க்காமல் புசுபுசு மற்றும் மிருதுவான ராகி ஆப்பம்! ரெசிபி இதோ….
இப்பொழுது நாம் வேக வைத்திருக்கும் பருப்பு கடைசிலையும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிய எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல், ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக சாம்பார் நன்கு கொதித்து வரும் நேரத்தில் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கடை சாம்பார் தயார்.