பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவின் ஸ்பெஷல் தேங்காய் பாகற்காய் ரெசிபி!

பாகற்காய் வேண்டாம் என குழந்தைகள் ஒதுக்கினாலும் அதன் மருத்துவ குணம் நிறைந்து வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சமைத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது தாய்மார்களின் கடமையாகும். பாகற்காயை வேண்டாம் என ஒதுக்குபவர்களுக்கு மத்தியில் வேண்டும் என அடம் பிடிக்கும் சில ரசிகர் கூட்டமும் உள்ளது. இந்த முறை பிடிக்காது என ஒதுக்கும் பகற்காய் வைத்து மீண்டும் மீண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான ரெசிபி இதோ..

முதலில் நமக்கு தேவையான அளவு பாகற்காய்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். வேக வைக்கும் பொழுது அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் மிகக் குறைவான தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மூன்று தக்காளிப்பழம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம் இரண்டு தக்காளி பழம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் வேக வைத்திருக்கும் பாகற்காயை கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

இப்பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் அல்லது தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடத்தில் பாகற்காய் நன்கு வெந்து மசாலாவுடன் ஒருசேர கலந்து விடும்.

இட்லி மற்றும் தோசை மாவு இல்லாத சமயங்களில் எளிமையான டின்னர் ரெசிபி…

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், தேக்கரண்டி சீரகம், 5 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் கலவையை பாகற்காயுடன் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். மிதமான தீயில் மீண்டும் மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை நன்கு வதக்க வேண்டும்.

கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் பாவக்காய் ரெசிபி தயார். இப்பொழுது கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம். இதை சூடான சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து இந்த பாவக்காய் கூட்டு வைத்து சாப்பிடும் பொழுது சிறப்பாக இருக்கும். மேலும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற சாத வகைகளுக்கும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.