இட்லி மற்றும் தோசை மாவு இல்லாத சமயங்களில் எளிமையான டின்னர் ரெசிபி…

பொதுவாக வீட்டில் மாவு இல்லாத சமயங்களில் ரவை வைத்து உப்புமா அல்லது கிச்சடி செய்வது வழக்கம். ஆனால் இந்த ரெசிபி பலருக்கு பிடித்தமானதாக இருப்பது இல்லை. இதற்கு பதிலாக மாவு இல்லாத சமயங்களில் விரும்பி சாப்பிடும் அளவிற்கு புதுமையான ரெசிபி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த விளக்கம் மிகவும் உதவியாக இருக்கும். வாங்க இந்த முறை அவள் வைத்து எளிமையான டின்னர் ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் காய்கறிகளை நறுக்கும் சாப்பர் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி பழம், ஒரு கேரட், ஐந்து பீன்ஸ், ஒரு சிறிய துண்டு இஞ்சி, நான்கு வெள்ளை பூண்டு, ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் .

நம் வீடுகளில் காய்கறி நறுக்கும் சாப்பர் பட்சத்தில் இந்த காய்கறிகளை ஒன்றாக சேர்த்து மிகக் கொடியாக நறுக்கி எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். இப்பொழுது அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி என்னை சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஐந்து முந்திரி சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். காய்கறிகள் வதக்கும்போது அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து ஒன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

இதற்காக அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசம் செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதை அடுத்து காய்கறிகளுக்கு நடுவே ஒரு முட்டையை உடைத்து சேர்த்து நன்கு காய்கறியோடு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சோம்பேறி டின்னர் ரெசிபி இதோ…

அடுத்து ஒரு கப் சிவப்பு அவல் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை நன்கு குளிர்ந்த நீரில் அவல் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக தேவையான அளவு சுடு தண்ணீர் கலந்து அவல் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை பிழிந்து எடுத்து அவல் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் அவலை முட்டை மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, தேக்கரண்டி மிளகுத்தூள், கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான அவல் ரெசிபி தயார்.